டெல்லி: இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் வங்கிகள் மினிமம் பேலன்ஸ், பரிவர்த்தனைக்கான கட்டணம் என வெளியிடும் எந்த ஒரு அறிவிப்பும் நேரடியாக கோடிக்கணக்கான மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.
இந்தியாவில் தனியார் வங்கியில் முன்னணி வங்கியாக செயல்படுகிறது ஐசிஐசிஐ . ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து ஐசிஐசிஐ வங்கியில் நகர்ப்புறங்களில் மற்றும் பெரு நகரங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான மினிமம் பேலன்ஸை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. ஐசிஐசிஐ வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய நிலையை தொடரும் என்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு இது பொருந்தும் என்றும் ஐசிஐசிஐ குறிப்பிட்டிருக்கிறது.

அதாவது ஒரு மாதத்திற்காக சராசரி குறைந்தபட்ச இருப்பு தொகையாக 50,000 ரூபாய் இருக்க வேண்டும் என்பதுதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவில் சேர்ந்த மிடில் கிளாஸ் மக்கள் பலரின் மாத வருமானமேர் இது கிடையாது என்பது தான் உண்மை. இந்நிலையில் பிரபல வங்கியாளரான உதய் கோடக்கின் மகனும் Kotak811 இன் துணை தலைவருமான ஜெய் கோடக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 90%க்கும் அதிகமானவர்களின் மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் தான் இருக்கிறது,அவர்களால் எப்படி மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க முடியும் என கேள்வி கேட்கிறார். ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய விதிமுறைப்படி இவர்கள் மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பு 50 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றால் தங்களின் சம்பளத் தொகையில் 94 சதவீத தொகையை அவர்கள் எப்பொழுதுமே வங்கி கணக்கிலேயே வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அனைத்து மக்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என கூறும் அவர் தனியார் வங்கிகள் இப்படி மக்களை விட்டு சென்றால் மக்கள் வங்கிகளை விடுத்து ஃபின் டெக் நிறுவனங்களை நோக்கி சென்றுவிடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கியும் கூட மினிமம் பேலன்ஸ் தொடர்பான முடிவுகளை அந்தந்த வங்கிகளே எடுத்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
ஐசிஐசிஐ வங்கியில் பெரு நகரங்கள் மற்றும் நகரங்களில் மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பாக 10,000 ரூபாய் இருந்தால் போதும் என இருந்தது அதனை தான் தற்போது 50,000 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது, மேலும் சிறு நகரங்களில் இது 25,000 ரூபாயு என்றும் கிராம பகுதிகளில் 5,000 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications