இந்தியாவில் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டப்பட்டு இருக்கும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த மசேதாவை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான இதே வேளையில் 118 வரலாற்றை புரட்டிப்போட்டு உள்ளார் ஒரு பெண்.
இந்தியாவின் மிக பழமையான மற்றும் மிகப்பெரிய போக்குவரத்து துறையான இந்திய ரயில்வே துறையின் நிர்வாக குழுவின் (railway board) முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராக ஜெய வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு அனில் குமார் லஹோட்டி இப்பதவியில் இருந்தார்.

ஜெய வர்மா சின்ஹாவின் நியமனம், இந்திய ரயில்வே துறையின் 166 ஆண்டுகால வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டத்தை குறிக்கிறது. காரணம் இந்த மிகப்பெரிய பதவியில் அமரப்போகும் முதல் பெண்ணாக ஜெய வர்மா உள்ளார்.
இவருடைய பணி அடுத்தடுத்து பல பெண் தலைவர்களை ரயில்வே நிர்வாகத்திற்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே துறையின் மிகப்பெரிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரயில்வே வாரியம், இந்திய ரயில்வேயில் உள்ள ஒரு முக்கிய அமைப்பாகும்.
ஜெய வர்மா அலாகாபாத் பல்கலைகழகத்தில் பட்டம்பெற்று 1988 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே டிராபிக் சர்வீசஸ் பணியில் சேர்ந்தார். தற்போது ரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே நிர்வாக குழுவில் ஆப்ரேஷன்ஸ் மற்றும் பிஸ்னஸ் டெவலப்மென்ட் பிரிவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.

மேலும் ஜெய வர்மா தான் இந்திய ரயில்வே துறையில் சரக்கு மற்றும் பயணிகள் சேவைக்கு பொறுப்பாகும். சமீபத்தில் 300 உயிர்களை காவு வாங்கிய பாலசோர் ரயில் விபத்துக்கு காரணமாக சிக்னலிங் சிஸ்டம் குறித்து விளக்கம் கொடுத்து மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஜெய வர்மா செப்டம்பர் 1 ஆம் தேதி இப்பதவியில் அமர உள்ளார், இவருடைய பணி காலம் ஆகஸ்ட் 31, 2024 வரையில் இருக்க உள்ளார். இதில் முக்கியமான டிவிஸ்ட் என்னவென்றால் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி ஜெய வர்மா ஓய்வு பெற உள்ளார், இந்த பதவி உயர்வு காரணமாக இப்பதவி காலம் வரையில் பணி காலம் நீட்டிப்பு பெற உள்ளார்.


Click it and Unblock the Notifications