அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்தவரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் தற்போது திமுகவில் இணைந்து இருக்கிறார், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இது மாறி இருக்கிறது. கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். உடன் அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் வந்திருந்தார்.

ஓபிஎஸ் 1973 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். தேனி மாவட்டத்தில் தனக்கென ஆதரவாளர்களை கொண்டுள்ள ஓபிஎஸ் படிப்படியாக உயர்ந்து கட்சியில் ஜெயலலிதாவின் நம்பிக்கையான நபராக உருவெடுத்தார். ஜெயலலிதா சிறை சென்ற போது தன்னுடைய முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் இடம் தான் ஒப்படைத்தார். அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவி வகித்த போது கட்சியில் பூசல் ஏற்பட்டது.
திடீரென ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்தார் ஓபிஎஸ். இதனை அடுத்து ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என கட்சி பிரிந்தது. பின்னர் மீண்டும் இணைந்தது. அதன் பின் தனி நபரானார் ஓபிஎஸ். அதிமுகவில் பொருளாளர், துணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

தற்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்த சொத்து விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் அசையும் சொத்துகள் 1 ,11 ,33 ,138 ரூபாய்க்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் ரொக்கம், வங்கி கணக்கில் இருக்கும் பணம் ஆகியவை அடங்கும். அசையா சொத்துகள் 7 ,80,99, 707 ரூபாய்க்கு இருப்பதாக தெரிவித்துள்ளார், இதில் விவசாய நிலம் , குடியிருப்புகள் ஆகியவை அடங்கும். மேலும், மறைந்த தனது மனைவி பெயரில் அசையும் சொத்து 10,17, 694 ரூபாய்க்கும், அசையா சொத்துகள் 76, 99,838 ரூபாய்க்கும் என மொத்தம் தனக்கு 9 ,79 , 60, 377 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர தனது பெயரில் 1.52 கோடி ரூபாய் கடன் உள்ளது எனவும், தன் மீது காவல் துறையில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், எந்த வழக்கிலும் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications