முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து என்று ஒரு வழக்கு நீண்ட காலம் நடந்து வரும் நிலையில் அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.மேலும்,வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் சனிக்கிழமை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் இந்த சொத்துகளை பெற்றுக் கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களில், அவருடைய தனிப்பட்ட அணிகலன்கள், புடவைகள், செருப்புகள், தங்க நகைகள், வைரப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கும். தமிழ்நாடு அரசின் இணைச் செயலாளர் ஆன் மேரி ஸ்வர்ணா, ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகளிடமிருந்து இந்தப் பொருட்களை பெற்றுக் கொண்டார்.1.2 கிலோ தங்க இடுப்புப் பட்டை,1.5 கிலோ தங்க வாள்,தங்க பேனா,வைரக் கற்கள், மரகதங்கள், ரூபி பதிக்கப்பட்ட தங்க நகைகள் 27,000 கிராம் எடையுள்ள மூன்று வெள்ளிப் பொருட்கள் ஆகும். மேலும், கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சில ஆடைகள் மற்றும் செருப்புகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் நீதிமன்ற உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ளவை. இவையும் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பணம் செல்லுபடியாகும் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, ரூ.10.18 கோடி மதிப்புள்ள நிலையான வைப்பு ரசீதுகள் காவலில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகையை தமிழ்நாடு கருவூலத்தில் டெபாசிட் செய்யுமாறு நீதிமன்றம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஜெயலலிதா மற்றும் அவரது நெருங்கியவர்களது பெயரில் இருந்த 1526.16 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்த ஆறு தனியார் நிறுவனங்களின் சொத்துகளாகும்.
நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நிலங்களை ஏலம் விடுவதற்கு பதிலாக பொதுப் பயன்பாடுகளுக்காக பயன்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் சொகுசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்பட்டது. அதிலிருந்து கிடைக்கும் தொகை தமிழக அரசின் கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.
வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக இருந்த சசிகலா மற்றும் இளவரசியால் செலுத்தப்பட்ட ரூ.20 கோடி அபராதத் தொகையில், வழக்கை
நடத்துவதற்கும் அவர்களது சட்டச் செலவுகளை ஈடுசெய்வதற்கும் ரூ.13 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீதான வழக்கு நீண்ட காலமாக நீடித்த நிலையில், இறுதியாக நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் அரசின் வசமாகவும், சிலவகை ஏலம் விடப்பட்டும், சிலவகை பொதுப் பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த ஜெயலலிதா பிப்ரவரி 24, 1948 ல் பிறந்தார். டிசம்பர் 5, 2016 ல் இயற்க்கை எய்தினார்.ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் நடிகை ஆவார். அவர் 1991 முதல் 2016 வரை ஆறு முறை பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications