கர்நாடகாவில் ,சோமேட்டோ,ஸ்விக்கி,ஃபிளிப்கார்ட்,உபேர் போன்ற ஆன்லைன் செயலிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் (கிக் பணியாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். தற்போது, கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான நடவடிக்கைகளை அமல்படுத்த அம்மாநில அரசு அவசர சட்டத்தை அமல்படுத்த உள்ளது. மேலும் கிக் தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் நல வாரியம் அமைக்க உள்ளது. கிக் தொழிலாளர்களுக்கான மொத்த ஊதியத்தில் 5 சதவீதம் செஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படும். மீதமுள்ள தேவையான நிதியை மாநில அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆனால், கர்நாடக அரசின் நோக்கம் நன்றாக இருந்தாலும் இந்த நடவடிக்கை குழப்பத்தை விளைவிக்கும் என்று டெக்ஸ்டர் கேபிட்டல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் ஜெயந்த் முந்த்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சோமேட்டோ,ஸ்விக்கி,ஜெப்டோ மற்றும் உபர் போன்றவை இப்போது டெலிவரி/டிரைவர்களுக்கு வழங்கப்படும் கமிஷனில் 5 சதவீதத்தை கழித்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டியிருப்பது வருந்தக்தக்கது. அரசு, அதை ஒரு நல நிதியில் வைப்பதாக சொல்கிறார்கள். கிக் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு உன்னதமானது போல் தெரிகிறது. ஆனால்,இது நல்ல நோக்கமாக தோன்றினாலும் குழப்பத்திற்கு வழி வகுக்கும்.

கர்நாடக அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பெங்களூவில் மட்டும் இதுபோன்ற தளங்களில் சுமார் 2 லட்சம் கிக் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 5 சதவீத கட்டணம் தொழிலாளர்களின் வருவாயை குறைக்கும் அல்லது எங்களை போன்ற நுகர்வோருக்கு செல்லும். மேலும் மசோதா தன்னிச்சையான பணிநீக்கங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளிக்கிறது. ஆனால் எப்படி?, எந்த தளத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் கிக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை.
அவர்கள் (தளங்கள்) அவர்களை (பணியாளர்கள்) வர்த்தக கூட்டாளிகள் என்று அழைக்கிறார்கள். பணியாளர்கள் எந்த நாளிலும் அல்லது எந்த நேரத்திலும் உள்நுழைந்து வெளியேறலாம். அதேநேரத்தில் செயலி தளங்களும் தங்கள் வருமானத்தை அதற்கேற்ப தீர்மானிக்கின்றன. இது அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குறுதியாகும்.
கிக் தொழிலாளர் நலவாரியம் நிதிகளை சேகரித்து நிர்வகிக்கும் ஆனால் இந்த வாரியங்கள் பெரும்பாலும் செயலிழந்து இருப்பதை வரலாறு காட்டுகிறது. கர்நாடக அரசின் சொந்த தொழிலாளர் நல நிதியம் 2019-24 வரை தொழிலாளர் திட்டங்களுக்கு அதன் நிதியில் 28 சதவீதம் மட்டுமே செலவிட்டது, 40 சதவீதம் சம்பளம் போன்ற நிர்வாக செலவுகளுக்கு சென்றது என்பதை கடந்த டிசம்பர் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டு இருந்தது. 2023ம் ஆண்டில் பொருளாதார ஆய்வறிக்கை, கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர் நல நிதி ரூ.50,000 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மோசமான தொடர்பு மற்றும் தேவையற்ற அலுவலக நடைமுறைகள் போன்றவற்றால் 70 சதவீத நிதி பயன்படுத்தபடவில்லை.
இந்த மசோதாவின் குறை தீர்க்கும் வழிமுறை, வேலை பாதுகாப்பு இல்லாத துறையில் ஒரு உண்மையான பிரச்சினையான நியாயமற்ற நடத்தை எதிர்த்துப் போராட தொழிலாளர்களுக்கு உதவும். வாக்குறுதியளித்தபடி, செயல்படுத்தப்பட்டால் மாநில அரசு கிக் தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு அல்லது காப்பீட்டை வழங்கக்கூடும். கர்நாடகாவின் இந்த நடவடிக்கை ஒரு முன்னுதாரணத்தையும் அமைக்கக்கூடும். இது மற்ற மாநிலங்களை கிக் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க தள்ளும்.
ஆனால் கடுமையான உண்மை என்னவென்றால், இந்தியாவில் இது போன்ற பெரும்பாலான அரசு நிதிகள் திறமையின்மை மற்றும் ஊழல்கள் காரணமாக தோல்வியடைகின்றன. விழிப்புணர்வு இல்லாமமை, சிக்கலான செயல்முறைகள் மற்றும் அதிகாரத்துவ அக்கறையின்மை ஆகியவை தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்றன என்று தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications