இந்தியா முழுவதிலும் மிக பிரபலமான மினரல் வாட்டர் நிறுவனம் பிஸ்லரி. இந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகான். இவர் அண்மையில் பிஸ்லரி நிறுவனத்தை விற்பனை செய்துவிட முடிவு செய்திருந்தார்.
கடும் போட்டியை மனதில் கொண்டு, டாடா-விடம் பிஸ்லரியை விற்பனை செய்யலாம் என ரமேஷ் சவுகான் முடிவு செய்தார். எனினும், பிஸ்லரிக்கு அவர் அதிக விலை கேட்டதால் வாங்கும் பேச்சுவார்த்தை இனி இல்லை என டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிஸ்லரி நிறுவனத்தை தனது மகள் ஜெயந்தி சவுகான் ஏற்று நடத்துவார் என ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெயந்தி சவுகான்!
ஜெயந்தி சவுகான் ரமேஷ் சவுகானின் ஒரே மகள் ஆவார். இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை டெல்லி, மும்பை மற்றும் நியூயார்க்கில் கழித்துள்ளார்.
ஜெயந்தி சவுகான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், லாஸ் ஏன்சல்ஸில் உள்ள Fashion Institute of Design and Merchandising (FIDM) இல் Product Development படிப்பை முடித்துள்ளார்.
பேஷன் உலகம்
அதன்பின் Istituto Marangoni Milano எனும் ஃபேசன் ஸ்டைலிங்காக பொறுப்பேற்றார். அதன்பின் London College of Fashion நிறுவனத்தில் Fashion Styling மற்றும் Photography ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார்.
அதுமட்டுமின்றி இவர் பல்வேறு முன்னணி பேஷன் ஹவுஸில் பயிற்சியாளராக இருந்துள்ளார் எனவும் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) பள்ளியிலிருந்து அரபியில் (degree in Arabic) பட்டம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
பிஸ்லரியில் ஜெயந்தி சவுகானின் பயணம்!
ரமேஷ் சவுகானின் வழிகாட்டுதலில்படி, ஜெயந்தி சவுகான் அவரின் 24 வயதில் பிஸ்லரி நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் டெல்லியில் உள்ள அவரின் அலுவலகத்தின் அடிமட்ட பணியிலிருந்து கரியரை தொடங்கியுள்ளார்.
அதன்பின் அங்கு தொழிற்சாலையை புதுப்பித்தல் மற்றும் பல்வேறு செயல்முறைகளை தானியங்குபடுத்தும் பணியை முன்னின்று வழிநடத்தியுள்ளார்.
முக்கிய துறைகள்
மேலும் வலுவான குழுக்களை உருவாக்குதல், மனிதவளம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளையும் அவர் மறுசீரமைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு மும்பை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அங்கு வெளிநாட்டு விற்பனை உள்ளிட்ட பிராண்டை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
முக்கிய வர்த்தகம்
குறிப்பாக Bisleri Mineral Water, Vedica Natural Mineral Water, fizzy fruit drinks மற்றும் Bisleri hand purifier ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை சீராக்கும் பணிகளில் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.
பிஸ்லரி விபரம்
மேலும் பிஸ்லரியின் பிராண்டிங், மார்க்கெடிங், மேலாண்மை போன்ற அனைத்திலும் இவர் சிறப்பாக பணியாற்றி வருவதாக, தொழில் விரிவாக்கத்திற்கான புதுப்புது ஐடியாக்களையும் இவர் வழங்கி வருவதாக பிஸ்லரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பிஸ்லரி நிறுவனத்தின் துணைத் தலைவராக ஜெயந்தி சவுகான் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், பிஸ்லரி நிறுவனத்தின் வேதிகா பிராண்டில் மட்டும் அவர் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
பிசினஸ் ஆசை இல்லை!
இப்படியாக ஜெயந்தி சவுகானின் பயணம் சென்று கொண்டிருந்தாலும், அவருக்கு தொழிலை ஏற்று நடத்த விருப்பமில்லை என தந்தை ரமேஷ் சவுகானிடம் கூறியுள்ளார்.
ரமேஷ் சவுகானுக்கு வயதாகிவிட்டதாலும், அவரின் மகள் ஜெயந்தி சவுகான் தொழிலில் ஆர்வம் செலுத்தவில்லை என்பதாலும் பிஸ்லரியை விற்க முடிவு செய்தார்.
டாடா குழுமம் உடன் டீல்
பிஸ்லரியை வாங்குவதற்கு அம்பானி முதல் டாடா வரை பலரிடமும் கடும் போட்டியை நிலவியது. அதன்பின் டாடாவிடம் பிஸ்லரியை விற்பனை செய்யலாம் என ரமேஷ் சவுகான் விரும்பினார். எனினும், பிஸ்லரிக்கு அவர் அதிக விலை கேட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பிஸ்லரி - டாடா இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்பட்டது.
ஜெயந்தி சவுகான் வழிநடத்துவார்
இதைத்தொடர்ந்து பிஸ்லரியை யார் வாங்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், பிஸ்லரி நிறுவனத்தை தனது மகள் ஜெயந்தி சவுகான் ஏற்று நடத்துவார் என ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications