பொதுவாகவே இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் எனலாம். பலர் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை.
ஏற்கனவே உள்ள தாக்கத்தினால் பல ஆயிரம்பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் எந்தெந்த துறையில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட போகிறார்களோ தெரியவில்லை.

இதற்கிடிடையில் பிரபல எர்த்மூவர்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனமான ஜேசிபி இந்தியா, கொரோனாவினால் ஏற்பட்ட சரிவினை சரிசெய்ய 400 நிரந்தர ஊழியர்ககையே பணி நீக்கம் செய்வதாக கடந்த வெள்ளிக்கிழமையன்றே அறிவித்துள்ளது.
எனினும் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மே மற்றும் ஜூன் மாதங்களில் அதன் தயாரிப்புக்கான தேவை 80 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மற்ற துறைகளைப் போலவே கொரோனாவினால் கட்டுமானம் மற்றும் உபகரண துறையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா காரணமாக கட்டுமான பணிகள் பெரிதும் முடங்கியுள்ளதால், இந்த நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் ஜேசிபி நிறுவனமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது,
மேலும் நிலவி வரும் அசாதாரண சூழ் நிலையை பொறுத்த வரையில், நிலைமையை சீரமைக்க இந்த அதிரடியான முடிவினை எடுக்க வேண்டியதாயிருந்தது என்றும் ஜேசிபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது,மட்டும் அல்ல கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவால் சீர்குலைந்த பொருளாதாரத்தினை மேம்படுத்த அதிரடியான இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் தங்களது பணியினை இழந்து வருகின்றனர்.
இந்தியாவில் முன்னணி நிறுவனமான ஜேசிபி இந்தியா, இந்தியாவில் ஒரு தனி இடம் வகித்து வருகிறது. இது கடந்த 2007 முதல் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. கிட்டதட்ட இந்த நிறுவனத்தில் தற்போது 5000 ஊழியர்கள் உள்ளனர்.
அதோடு சுமார் 600 டீலர்களும், 800 விற்பனையகங்களும் உள்ளன. இந்த நிலையில் இந்த நிறுவனம் இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்று தான் இந்த கொரோனா என்னும் அரக்கன் நாட்டை போகுமோ? தெரியவில்லை. அப்போது தான் இதுபோன்ற நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வதை நிறுத்துவார்கள்.


Click it and Unblock the Notifications