H-1B விசா விவகாரம்.. ரவுண்டு கட்டி அடித்த ஜேடி வேன்ஸ்.. இப்படியெல்லாம் மோசடி செய்தால் எப்படி?!

உலகம் முழுவதும் இருக்கும் இளம் தலைமுறையினரின் அமெரிக்க கனவை நிறைவேற்றும் முக்கிய பாலமாக இருக்கும் ஹெச்1பி விசா மீது அமெரிக்க அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருவதை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அமெரிக்க துணை அதிபரான ஜேடி வான்ஸ் இந்த கட்டுப்பாடுகள் சரி என்றும், எதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது, அமெரிக்கா நிறுவனங்களும், அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டு நிறுவனங்களும் எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதை விவரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் All-In என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ஜேடி வான்ஸ், H-1B திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன..? ஹெச்1பி விசா என்பது உலகளவில் மிகவும் திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு ஈர்ப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால் தற்போது அமெரிக்கர்கள் செய்யும் வேலையை, குறைந்த சம்பளத்தை வாங்கும் வெளிநாட்டு ஊழியர்களால் மாற்றுவது தான் பெரும்பாலான இடத்தில் நடக்கிறது என கூறிய அவர் ஒரு உதாரணத்தையும் முன்வைத்தார்.

H-1B விசா விவகாரம்.. ரவுண்டு கட்டி அடித்த ஜேடி வேன்ஸ்.. இப்படியெல்லாம் மோசடி செய்தால் எப்படி?!

ஆண்டுக்கு 60000 டாலர் சம்பளம் பெறும் ஒரு அக்கவுண்டன்ட் பணியை, 45000 டாலர் சம்பளத்தில் குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு அக்கவுண்டன்ட் மூலம் மாற்றுவது H1B திட்டத்தின் நோக்கம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மோசடிகளை தடுக்கவே ஹெச்1பி விசாவுக்கு 100000 டாலர் கட்டணம் விதிக்கப்படுவதாக வான்ஸ் தெரிவித்தார்.

இதேவேலையில் ஹெச்1பி விசா திட்டத்தை அதிகம் பயன்படுத்திம் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தடுப்பதற்கான வழிகளையும் எங்களுடைய நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்தார் ஜேடி வான்ஸ்.

மேலும் அமெரிக்காவில் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக கூறி தான் ஹெச்1பி விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் சேர்க்கிறது, ஆனால் இதேவேளையில் அமெரிக்க ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்வது எப்படி நியாயமாக இருக்கும் என்ற கேள்வியையும் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.

மேலும் ஹெச்1பி விசா முறையில் சட்ட அளவிலான மாற்றங்களை கொண்டு வருவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் போதுமான விருப்பம் இல்லாத காரணத்தால் எங்களுடைய அரசு Executive நடவடிக்கை மூலம் இதை சாத்தியப்படுத்தி வருகிறது எனவும் ஜேடி வான்ஸ் விளக்கினார்.

இதன் மூலம் டிரம்ப் மிட்டேர்ம் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் விசா மீதும், குடியிருப்பு விதிகள் மீதும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டு இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே விசா வழங்குவதிலும், கிரீன் கார்டு வழங்கும் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டு இருக்கும் வேளையில் ஜேடி.வேன்ஸ்-ன் நிலைப்பாடு அமெரிக்க கனவுடன் இருக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+