மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா.. ஒரு கன்னத்தில் அறைந்து.. மறு கன்னத்தில் கிள்ளி முத்தம் கொடுக்கும் அமெரிக்கா..!

அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் ஒருபக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை PERM திட்டத்தின் மூலம் கிரீன் கார்டு பெறுவதைத் தடை செய்து, இந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த அடுத்த சில மணிநேரத்தில் அமெரிக்க அதிபரான டிரம்ப் மைக்ரோசாப்ட் சிஇஓ-வும் இந்தியருமான சத்ய நாடெல்லா-வை பாராட்டித் தள்ளினார்.

அமெரிக்க அரசு தொடர்ந்து குடியுரிமை விதிகளைக் கடுமையாக்கி வரும் வேளையில், நேற்று அதிரடியாக அந்நாட்டின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையில் தொழிற்துறை அமைச்சக அதிகாரிகள் இணைந்து சுமார் 8 ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மீது PERM திட்டத்தின் கீழ் விசா பெற தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா.. ஒரு கன்னத்தில் அறைந்து.. மறு கன்னத்தில் கிள்ளி முத்தம் கொடுக்கும் அமெரிக்கா..!

8 நிறுவனங்களுக்குத் தடை

காக்னிசென்ட், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, மைக்ரோசாப்ட், அடோப் ஆகிய 8 நிறுவனங்கள் விசா திட்டத்தையும், குடியுரிமை திட்டத்தையும் முறைகேடாகப் பயன்படுத்திய காரணத்தால் இத்தடையை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் அதிரடி நடவடிக்கைக்கு மைக்ரோசாப்ட் கடுமையான பதிலையும் கொடுத்துள்ளது. நேற்று அமெரிக்காவில் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்ய நாடெல்லாவுக்கு தொழில்நுட்பம் மற்றும் இன்னோவேஷனுக்கான தேசிய அளவிலான மெடல் கொடுக்கப்பட்டது.

சத்ய நாடெல்லாவுக்கு விருது

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் கடந்த 30 வருடமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக இருந்தவர் என டிரம்ப் பெருமையாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் 6 டெக் சிஇஓ-க்களுக்கு பதக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், 6 பேரும் வெளிநாட்டில் பிறந்தவர்கள்.

மைக்ரோசாப்ட் கொடுத்த பதில்

இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு முன்பு தான் ஜேடி வான்ஸ் PERM திட்டத்தில் பங்கு பெறுவதில் தடை விதித்தார். இதற்கு மைக்ரோசாப்ட் கொடுத்த பதிலில், மைக்ரோசாப்ட் நிர்வாகத்திற்கு அமெரிக்கத் தொழிலாளர்கள் மீதும் அவர்களின் திறன் மீதும் பெரும் நம்பிக்கை உள்ளது. இதனால் தான் எங்களுடைய பெரும் பகுதி ஊழியர்கள் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதேபோல் அமெரிக்கா ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு வெளிநாட்டு ஊழியர்களைக் குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்தப்படுவதாக எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூடுதல் விபரத்தை நாங்கள் அளிக்க விரும்புகிறோம்.

கடந்த நிதியாண்டில் 6000 ஹெச்1பி விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தோம், இதில் 80 சதவீத விண்ணப்பங்கள் தற்போது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான விசா நீட்டிப்பு, ஸ்டோட்டஸ் மாற்றத்திற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களாகும்.

கடந்த நிதியாண்டில் விசா மூலம் புதிதாக ஊழியர்களைச் சேர்க்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் இது வெறும் 1 சதவீதம் மட்டுமே. மேலும் எங்களுடைய நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் டெக் துறையில் கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளத்தை மட்டுமே கொடுக்கிறோம், குறைவான சம்பளத்தில் யாரையும் நியமிக்கவில்லை எனவும் கடுமையான வார்த்தையில் விளக்கம் கொடுத்தது.

ஜேடி வான்ஸ்-ன் பிளாஸ்ட்

ஜேடி வான்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறித்துப் பேசுகையில் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போல் எந்தொரு நிறுவனமும் விசா அமைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியது இல்லை.

2025ல் மைக்ரோசாப்ட் 6000 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, ஆனால் இதே காலகட்டத்தில் 6000 ஊழியர்களுக்கான விசா ஒப்புதலைப் பெற்றுள்ளது. 3682 பேருக்கு PERM திட்டத்தின் கீழ் கிரீன்கார்டு பெற்றுள்ளது.

இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஊழியர்களின் இடத்திற்காக 1000 விசா விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளது என தெரிவித்தார் ஜேடி வேன்ஸ். இதற்காகவே சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் விளக்கம் கொடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+