அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது கேர்ள்பிரெண்டான லாரன் சான்செஸ் உடன் இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் அஸ்பெனில் 600 மில்லியன் டாலர் செலவில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுவதாகச் சமீபத்தில் அமெரிக்க ஊடகத்தில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்க நெருங்க இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அமெரிக்க ஊடகங்கள் பல ஜெப் பெசோஸ் இடம் பார்த்துவிட்டார், அம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட பிரம்மாண்டமாகத் திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது என செய்திகளை வெளியிட்டு வந்தது.

இதைப் பார்த்து பொறுமை இழந்த ஜெஃப் பெசோஸ் டிவிட்டரில் பிரபல முதலீட்டாளரான பில் அக்மேன் செய்த ஒரு பதிவுக்கு பதில் அளிக்கும் வாயிலாக அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முதலீட்டாளர் பில் ஆக்மேன் நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின் லிங்க்-ஐ ஷேர் செய்து இந்த திருமண செய்திகள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ஜெப் பெசோஸ் திருமணத்திற்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் அவர் ஒரு வீட்டை பரிசாக வழங்க திட்டமிடாவிட்டால் தான் 600 மில்லியன் டாலர் திருமண செலவு ஆகும், இது சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டினார்.
இந்த பதிவுக்கு தான் ஜெப் பெசோஸ் பதில் அளித்துள்ளார், இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும், இணையத்தில் பரவும் தகவல்களை அப்படியே நம்பாமல் அடிப்படை உண்மையை ஆராய்ந்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "உண்மை வெளிச்சத்திற்கு வரும் முன்பு பொய்கள் உலகம் முழுவதும் பரவிவிடும்" என்றும் ஜெப் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜெப் பெசோஸ் தொடர்ந்து லாரன் சான்செஸ்-ம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பெசோஸின் பதிவை பகிர்ந்து, திருமண செய்திகள் "உண்மை இல்லை" என்று உண்மையை விளக்கியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு, கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட லாரன் சான்செஸ் தன் கையில் அணிந்திருந்த 20 கேரட் வைர மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தlg. இந்த ஹார்ட் வடிவிலான மோதிரம், அவருக்கும் ஜெஃப் பெசோஸ்-க்கு திருமணத்திற்குத் தயாராகி வருவதாகவும், ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான க்ரூஸ் கப்பலான KORU-வில் மத்தியதரைக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்த போது, ஜெஃப் பெசோஸ், லாரன் சான்செஸிடம் திருமணம் செய்துகொள்ளும்படி தனது காதலை வெளிப்படுத்தி லாரன் சான்செஸுக்கு மோதிரத்தை பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த சிறப்பு நிகழ்வில், இருவரின் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து தான் 2024 ஆம் ஆண்டு இறுதியில் இருவரும் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொள்ளும் செய்தி பரவிய போது அனைவராலும் நம்பப்பட்டது.


Click it and Unblock the Notifications