2வது கணவனை ஓரே வருடத்தில் விவாகரத்து செய்த மெக்கென்சி ஸ்காட்.. ஜெப் பெசோஸ் ஷாக்..!

பெரும் பணக்காரர்கள், பிரபலங்களின் விவாகரத்து என்பது எப்போதுமே அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் விஷயமாகவே இருக்கும்.

கொரோனா காலத்தில் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பல மாதங்கள் இணைய உலகையும், டெக் உலகையும் விடாமல் ஆட்கொண்டு வந்தது. இதன் பின்பு மெலிண்டா ஒரு பேட்டியில் பில் கேட்ஸ்-ன் தவறான உறவு குறித்த செய்தியும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ்-ன் முதல் மனைவி 2வது முறையாக விவாகரத்து செய்துள்ளார்.

ஜெஃப் பெசோஸ் - மெக்கென்சி ஸ்காட்

ஜெஃப் பெசோஸ் - மெக்கென்சி ஸ்காட்

ஜெஃப் பெசோஸ்-ன் முதல் மனைவி மெக்கென்சி ஸ்காட் அவரின் கள்ள உறவு குறித்து அறிந்த நிலையில், ஜெஃப்-ஐ ஏற்க முடியாமல் விவாகரத்து செய்தார். இன்றளவும் ஜெஃப் பெசோஸ் - மெக்கென்சி ஸ்காட் விவாகரத்தில் ஜீவனாம்சம் தொகை தான் மிக பெரியது. இந்த ஜீவனாம்சம் தொகை மூலம் மெக்கென்சி ஸ்காட் மிகப்பெரிய பணக்கார பெண்ணாக உயர்ந்தார்.

மெக்கென்சி ஸ்காட்

மெக்கென்சி ஸ்காட்

இந்த நிலையில் பில்லியனரான மெக்கென்சி ஸ்காட் தனது இரண்டாவது கணவர் டான் ஜுவெட்டிட்-யிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் (NYT) தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்

வாஷிங்டன்

நீதிமன்ற தகவல் படி மெக்கென்சி ஸ்காட் திங்களன்று வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கிங் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார்.

டான் ஜுவெட்டிட்

டான் ஜுவெட்டிட்

மெக்கென்சி ஸ்காட் 2019 இல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-ஐ விவாகரத்து செய்து பிரிந்த பிறகு சில வருடங்கள் தனியாக வந்த அவர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சியாட்டில் நகரத்தை சேர்ந்த முன்னாள் அறிவியல் ஆசிரியரான டான் ஜுவெட்டிட்-ஐ ஸ்காட் மணந்தார்.

டான் ஜுவெட்டிட் பெயர் நீக்கம்

டான் ஜுவெட்டிட் பெயர் நீக்கம்

இந்த தகவல் வெளியான பின்பு மெக்கென்சி ஸ்காட் தனது இணையப் பக்கத்தில் டான் ஜுவெட்டிட்-ஐ குறிப்பிட்டு, டேக் செய்த பல போட்டோ, பதிவுகளை நீக்கியுள்ளார். இதில் அமேசான் ஆத்தர் பயோ மற்றும் Giving Pledge இணையதளத்திலும் டான் ஜுவெட்டிட் பெயரை மெக்கென்சி ஸ்காட் நீக்கினார்.

நன்கொடை

நன்கொடை

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் விவாகரத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் பங்குகள் வந்தது. இதில் பெரும் பகுதியை மக்களும், சமூகத்திற்கும் நன்கொடையாக அளிப்பேன் என்று மெக்கென்சி ஸ்காட் - டான் ஜுவெட்டிட் உறுதியளித்த நிலையில் மார்ச் மாதம் சுமார் 465 தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 3.9 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியைச் செய்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+