உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரும், அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி, பல வருட கேர்ள்பிரண்டான லாரன் சான்செஸ் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது முதல் பார்ட்டி-க்கு செல்வது வரையில் அனைத்திலும் தன் வாழ்க்கையில் பகிர்ந்துக்கொண்டு உள்ளார்.
இப்படி லாரன் சான்செஸ் தனது வாழ்க்கையை ஜெஃப் பெசோஸ் உடன் கொண்டாடி வரும் வேளையில் ஒரு விஷயத்தில் மட்டும் பெசோஸ்-ஐ சேர்க்கமாட்டார் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இது என்ன விஷயம்..?

ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் எதை செய்தாலும் ஓன்றாக, ஓரே விஷயத்தை செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். ஜிம்-ல் வொர்க் அவுட் செய்யும் போது மட்டும் தனித்தனியாக வொர்க் அவுட் செய்வார்கள் என வோக் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் ஜிம்-க்கு ஒன்றாக சென்றாலும் தனித்தனியாக அவர்களுக்கு விருப்பத்தின் பெயரில் வொர்க்அவுட் செய்வார்கள் என்றும் இதற்கான காரணத்தையும் வோக் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டியில் லாரன் சான்செஸ், ஜெஃப் பெசோஸ் நான் செய்யும் உடற்பயிற்சியை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட உடற்பயிற்சியை செய்வார். ஜிம்மில் அவர் ஒரு அசுரன் (Monster) எனவும் குறிப்பிட்டார் ஜெப்-ன் வருங்கால மனைவியான சான்செஸ்.
மேலும் லாரன் சான்செஸ், ஜெஃப் பெசோஸ் பிட்னஸ் மீதான அவரது அர்ப்பணிப்பை பாராட்டினார். சில மாதங்களுக்கு முன்பு லாரன் தனது சமுகவலைத்தள பக்கத்தில், ஜெஃப் பெசோஸ்-ன் சட்டை இல்லாமல் புகைப்படங்களைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் மார்க் ஜூக்கர்பெர்க், எலான் மக்ஸ் பிட்னஸ் குறித்தும், சண்டை போடுவது குறித்தும் பேசப்பட்டது, ஜெஃப் பெசோஸ் இறக்கிவிட்டு இருக்கலாம் போலியே..!!
ஜெப் பெசோஸின் உடல் கொழுப்பு சதவீதம் 12 முதல் 14% வரை இருப்பதாகவும் லாரன் சான்செஸ் இந்த பேட்டியில் தெரிவித்தார். ஜெஃப் பெசோஸ்-ன் பர்சனல் பிட்னஸ் பயிற்சியாளரான பெயர் வெஸ் ஒக்கர்சன். இவர் முன்பு டாம் குரூஸ் உடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications