உலகளவில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் அமேசான் ரெசிஷன் அச்சம் காரணமாகவும், பங்கு மதிப்பு மற்றும் லாப அளவீட்டை மீட்டு எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக லாபம் மற்றும் வருவாய் ஈர்க்காத வர்த்தகத்தை மூட முடிவு செய்துள்ளது.
இதேபோல் செலவுகளை உடனடியாகக் குறைக்க டிவிட்டர், மெட்டா நிறுவனங்களைப் போல் அமேசான் நிறுவனமும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
அமேசான்.காம்
அமெரிக்கா-வை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனம் இந்த வாரத்தின் துவக்கம் முதல் அதன் கார்பரேட் மற்றும் டெக்னாலஜி பிரிவுகளில் இருக்கும் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் மற்றும் மெட்டா
டிவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தின் மாஸ் லேஃஆப் தாக்கம் இன்னும் தீராமல் இருக்கும் வேளையில், அமேசான் நிறுவனத்தின் பணிநீக்க செய்தி டெக் ஊழியர்கள் மத்தியில் தாக்கத்தை அதிகரித்துள்ளது.
டிவிட்டர்
முதலில் டிவிட்டர் தனது 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போது சந்தையில் போதுமான வேலைவாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் பணியை இழந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டது.
புதிய வேலைவாய்ப்புகள்
ஆனால் அடுத்தச் சில நாளிலேயே முன்னணி நிறுவனங்கள் Hiring-ஐ மொத்தமாக நிறுத்தியது மட்டும் அல்லாமல் ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்யத் துவங்கியது. இதனால் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.
விசா
குறிப்பாக விசா-வில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுவோர் 60 நாட்கள் வேலை இல்லாமல் இருந்தால் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
முக்கியப் பிரிவு
அமேசான் நிறுவனத்தில் இருந்து தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தப் பணிநீக்கம் Alexa டிவைசஸ் பிரிவிலும், ரீடைல் பிரிவிலும், ஹெச்ஆர் பிரிவிலும் அதிகமாக இருக்கும். இதேபோல் மொத்தம் 10000 ஊழியர்களைத் திங்கட்கிழமை முதல் படிப்படியாகப் பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
1,608,000 ஊழியர்கள்
டிசம்பர் 31, 2021 நிலவரப்படி அமேசான் நிறுவனத்தில் முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களாகச் சுமார் 1,608,000 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த வாரம் தான் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
அமேசான் தலைகீழாக மாறியது
இதே அமேசான் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஊழியர்களைத் தக்க வைக்கப் போராடியது மட்டும் அல்லாமல் சம்பளத்தை வாரி வழங்கியது. ஆனால் இப்போது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் அமேசான் 3 சதவீத ஊழியர்கள் அதாவது 10000 கார்ப்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம் அளவுகள்
அமெரிக்காவின் அக்டோபர் மாத பணவீக்க அளவுகள் குறைந்தாலும் ரெசிஷன் அச்சம் இன்னும் குறைந்தபாடு இல்லை என்பது வருத்தமான செய்தியாகவே உள்ளது. இது டெக் நிறுவனங்களை அதிகமாகப் பாதிக்கிறது என்பது கூடுதல் சுமையாக உள்ளது.
domino effect எதிரொலி
அமெரிக்காவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அளவுகள் கணிசமாகச் சரிந்திருந்தாலும், உலக நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் மூலம் domino effect எதிரொலியாக அமெரிக்கா கூடுதலாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தான் இந்தியாவுக்கும்.


Click it and Unblock the Notifications