அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் (61) மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸ் (55) இத்தாலியின் அழகிய வெனிஸ் நகரில் தங்கள் திருமண விழாவை மிகப்பெரிய ஆடம்பரத்துடன் தொடங்கியுள்ளனர். இந்த திருமணம் ஹாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகளாவிய பிரபலங்களை உள்ளடக்கிய சிறப்பான விருந்தினர்களுடன் 3 நாட்கள் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் மூலம், அவர்கள் திருமணத்தை ஒரு பிரமாண்டமான நிகழ்வாகவே மாற்றியுள்ளனர். திருமண விழாவில் விருந்தினர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்பது கூட பலரிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் இருவரும் காதலித்து வருகின்றனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் "மிதக்கும் நகரம்" என அழைக்கப்படும் இத்தாலியின் வெனிஸில் இறங்கியதுமே, ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள திருமண விழாவிற்காக, உலக பிரபலங்கள் வெனிஸில் குவியத் தொடங்கியுள்ளன.

இந்த பிரமாண்ட திருமணத்தின் மொத்த செலவு, ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க டாலரில் $46.5 மில்லியன் முதல் $55.6 மில்லியன் வரை இருக்கலாம். அதாவது, இந்திய மதிப்பீட்டில் இது சுமார் ₹388 கோடி முதல் ₹460 கோடி வரை ஆகும். இது வெறும் திருமணமல்ல, உலகமே கவனம் செலுத்தும் ஒரு பிரபல நிகழ்வாக மாறியுள்ளது.
ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் திருமண விழா வெனிஸில் தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் பிரபலங்கள் வருகை தந்தவுடன் விழா இன்னும் கோலகலமாகியுள்ளது. முதலில் வந்த பிரபலங்கள் வரிசையில், இவாங்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை St. Regis ஹோட்டலுக்கு வந்தனர்.
அதே நேரத்தில், 2016ல் நடந்த பாரிஸ் கொள்ளை வழக்கில் வெற்றிபெற்ற கிம் கர்தாஷியன், தனது தனித்துவமான Balenciaga உடையில் வெனிஸ் மார்கோ போலோ விமான நிலையத்தில் காட்சியளித்தார். இவருடன், சிறுத்தை (leopard) அச்சிடப்பட்ட ஆடையில் இருந்த க்லோ கர்தாஷியன் மற்றும் அவரது காதலர் கோரி கேம்பிள், ஒரு நாளுக்குப் பிறகு விழாவில் இணைந்தனர். அவர்களுடன், கர்தாஷியன் குடும்பத்தின் தலைமையிலான கிறிஸ் ஜென்னரும் வந்திருந்தார். இந்த வருகைகள், விழாவின் பிரமாண்டத்தையும், அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் அளவையும் தெளிவாக காட்டுகின்றன.
அதேபோல், அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிருபரும், தயாரிப்பாளருமான ஓப்ரா வின்ஃப்ரே, வெனிஸில் நடைபெறும் ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸின் திருமண விழாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்த விருந்திலும் கலந்து கொண்ட ஓப்ரா, தற்போது திருமண நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.
மேலும், கிராமி விருது பெற்ற பாடகர் உஷர், முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடமான கிரிட்டி பேலஸ் ஹோட்டலுக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் திரைப்படத்தில் நடித்த ஆர்லாண்டோ ப்ளூம், தனது வருங்கால மனைவி கேட்டி பெர்ரியை அழைத்து வராமல் தனியாகவே விழாவில் கலந்து கொள்வது அவர்களின் உறவுப் பின்னணி குறித்து பல வதந்திகளை கிளப்பியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications