உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வேகமாக முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார். அண்மையில் ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் தன் வசம் இருந்த 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பாக அமேசான் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் 16 மில்லியன் பங்குகளை ஜெஃப் பெசோஸ் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 200 டாலர்கள் என்ற வீதத்தில் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாகில் அமேசான் நிறுவனம் பட்டியலிடப்பட்டதிலிருந்து முதன்முறையாக அமேசான் நிறுவனத்தின் ஒரு பங்கு 200 டாலர் என்ற விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 7 சதவீத வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த ஓராண்டில் மட்டும் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பில் கூடுதலாக 42.8 பில்லியன் டாலர்கள் வரை சேர்ந்துள்ளது. இதன் காரணமாக இவருடைய சொத்து மதிப்பு 220 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டி உள்ளது.
எனவே இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மெட்டாவின் மார்க் ஸக்கர்பர்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 262 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மூன்றாவது இடத்தில் இருப்பவர் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க். இவரது சொத்து மதிப்பு 201 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அமேசான் நிறுவனத்தில் கணிசமான அளவு பங்குகளை விற்று விட்டாலும் அமேசான் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 10.8% பங்குகளை ஜெஃப் பெசோஸ் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து 2021 ஆம் ஆண்டிலிருந்து ஜெஃப் பெசோஸ் பதவி விலகி விட்டார் இருந்தாலும் அவர் தலைவர் என்ற பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பதால் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு அவ்வாறே இருக்கிறது. அமேசான் நிறுவன பங்குகளை விற்பனை செய்து அதை தன்னுடைய மற்ற நிறுவனங்களின் திட்ட பணிகளுக்காக ஜெஃப் பெசோஸ் பயன்படுத்தி வருகிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications