உலகின் முன்னணி பணக்காரரும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெஃப் பிஜோஸ் மீது அவரது வீட்டில் பணிபுரியும் சுகாதார ஊழியர் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தங்களுக்கு போதுமான வசதிகள் இல்லை என்று அவர் பதிவு செய்துள்ள வழக்கு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் சுகாதார ஊழியர் பதிவு செய்த வழக்கு என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
அமேசான் வீட்டின் ஊழியர்
உலகின் முன்னணி பணக்காரரான ஜெஃப் பிஜோஸ் வீட்டில் வேலை செய்யும் சுகாதார ஊழியர் மெர்சிடிஸ் வேதா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் தனக்கு இனரீதியான தொல்லை இருப்பதாகவும் சுகாதாரமற்ற பணிச்சூழல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 மணி நேர வேலை
மெர்சிடிஸ் வேதா மேலும் தனது மனுவில், 'தான் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 10 முதல் 14 மணி நேரம் வேலை செய்வதாகவும் முன்னணி வீட்டு பணியாளராக வேலை செய்யும் தான் ஐந்து முதல் ஆறு வீட்டு பணியாளர்களை மேற்பார்வை செய்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு அறை
மேலும் அந்த புகாரில் ஊழியர்களுக்கு ஓய்வு அறை ஏற்பாடு செய்யவில்லை என்றும் அமேசான் நிறுவனர் பிஜோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் போது வீட்டுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதால் வீட்டு பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
மேலும் பிஜோஸ் மேலாளர்களில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுப்பு
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமேசான் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இந்த மனு குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். வேதா கொடுத்த புகார் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம் என்றும் ஆனால் அந்த புகாரில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வசதிகள்
ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்கு இரண்டு அறைகள் உள்ளன என்றும் அதில் இருக்கைகள் மற்றும் குளிர்சாதன பெட்டி, காபி மெஷின், சிற்றுண்டி வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர்கள் பயன்படுத்துவதற்கு குளியலறைகள், இலவச மதிய உணவு ஆகிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்றும் வேதா கூறிய புகார் அபாண்டமானது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications