உலகின் மூன்றாவது பெரும் பணக்கார் மற்றும் அமேசான் குழுமத்தின நிறுவனரான ஜெஃப் பெசோஸ் கடந்த ஆண்டு தனது ஆசை காதலி, லிவ்-இன் பார்ட்னர் லாரன் சான்செஸ் உடன் தனது பிரம்மாண்ட படகில் சன்பாத்திங் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த படகுக்கு கோரு என்று பெயரிட்டு உள்ளார் ஜெப் பெசோஸ்.
பெரும் பணக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து பெரும் பகுதியை வரியாக செலுத்துவதை தவிர்க்க பல வகையில் அதை செவவு செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். ஆடம்பர காரில் துவங்கி உல்லாச பயணம்.. சொந்த விமானம், சொந்தமாக கப்பல் என பலவற்றை வாங்குவது வழக்கம்.

இப்படி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்து தற்போது லாரன் சான்செஸ் உடன் வாழ்ந்து வரும் வேளையில், இவர் மீதான காதலையும், அன்பையும் காட்ட இந்த பிரம்மாண்ட கப்பலை வாங்கியது மட்டும் அல்லாமல் லாரன் சான்செஸ்-ன் சிற்பத்தை படகில் வைத்துள்ளார் ஜெப் பெசோஸ்.
இந்த நிலையில் கோரு மற்றும் அதன் மதிப்பு என்ன என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். மோரி (MORI) மரபுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க சின்னங்களில் ஒன்றாக இருப்பது கோரு (KORU), இது ஒரு திவாரத்தின் இழை விரியும் தன்மையின் ஆரம்ப பகுதியை குறிக்கிறது.
கோரு (KORU) என்பதன் பொருள் புதிய தொடக்கங்கள், வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம், பாசிடீவ் ஆன மாற்றம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது என்று பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் முன்பு கூறியிருந்தார்.

கோரு என்ற கப்பலில் மூன்று பாய்மரங்கள் கொண்ட ஒரு பெரிய படகாகும். இந்த பெரிய படகில் அவசர காலத்திற்காக பயன்படுத்தப்படும் சிறிய படகுகள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் கொண்டு செல்லும் அளவுக்கான 246 அடி நீளம் கொண்ட படகு. அதன் பாய்மர தூண்கள் மட்டும் சுமார் 229 அடி உயரம் கொண்டவை, இந்த பெரிய படகு 20 knots வேகத்தில் செல்ல கூடியவை.
இந்த பிராம்மாண்ட படகின் விலை 500 மில்லியன் டாலர்கள் அதாவது 4,145 கோடி ரூபாய். இந்த படகில் சினிமா தியேட்டர், அதிக எண்ணிக்கையிலான ஓய்வறைகள் மற்றும் பிஸ்னஸ் ரூம் உள்ளன என்று பல வெளியீடுகளில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications