இந்தியாவின் மிகவும் பழமையான வர்த்தக சாம்ராஜ்ஜியமான வாடியா குழுமத்தின் தலைவர் நுஸ்லி வாடியாவின் இளைய மகன் ஜெஹாங்கிர் வாடியா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத் தொழிலில் மீண்டும் இணைந்துள்ளார். லண்டனில் வசித்து வந்த ஜெஹாங்கிர், தற்போது வாடியா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் இயக்குரகத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஓவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை போலவே, குடும்ப வர்த்தகத்தில் இருக்கும் அனைத்து சாம்ராஜ்ஜியங்களிலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சனையிருக்கும். இந்த பிரச்சனைகளை எளிதாக கடந்து வெற்றிக்கண்ட பல சாம்ராஜ்ஜியங்கள் இருந்தாலும், சில இப்பிரச்சனைகளில் பல துண்டுகளாக உடைந்து விடுகிறது.

இப்படி தான் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாடியா குழுமத்தின் அனைத்து இயக்குநர் பதவிகளிலிருந்தும் ஜெஹாங்கிர் வாடியா திடீரென விலகி, குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆக முடிவு செய்து இந்தியாவை விட்டு கிளம்பினார். இதனால் வாடியா குழுமத்தில் வாரிசு தலைமையில் புதிய பிரச்சனை உருவாகியிருப்பதாக இப்போது கூறப்பட்டது.
1736ல் துவங்கப்பட்ட வாடியா குழுமம் தான் தற்போது பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பாம்மே டையிங், கோ பர்ஸ்ட், பாம்பே பூம்ரா டிரேடிங், நேஷ்னல் பெராக்சைட் போன்ற நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் லண்டனில் தந்தை மற்றும் மகன் இடையே நடந்த தொடர்ச்சியான ஆலோசனைக்கு பின்பு ஜெஹாங்கிர் வாடியா மீண்டும் நிர்வாக பொறுப்புகள் ஏற்க வருகிராக். 81 வயதான நுஸ்லி வாடியா, 51 வயதான ஜெஹாங்கிரை இந்தியாவுக்கு அழைத்து திரும்பி குழுமத்தின் செயல்பாடுகளுக்கு தனது நிபுணத்துவத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் மூலம், நுசில் வாடியாவின் பொறுப்புகளை குறைத்து, ஜெஹாங்கிர் வாடியா தலைமையில் புதிய உத்வேகம் குழுமத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெஹாங்கிர் வாடியா வருகை மூலம் வாடியா குழுமத்திற்கு நீண்ட கால தலைமை கிடைத்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கோ ஏர் வீழ்ச்சி வாடியா குழுமத்திற்கு பெரும் இழப்பாக இருக்கும் வேளையில், மீண்டும் வலிமையான நிலைக்கு செல்ல இளம் தலைமுறையினரின் தலையீடு தேவை என்பதை நுசில் வாடியா உணர்ந்ததன் விளைவாகவே ஜெஹாங்கிர் வாடியா லண்டனில் இருந்து இந்தியா வர முடிவு செய்துள்ளார்.
ஜெஹாங்கிர் வாடியா இனி வரும் காலத்தில் லண்டனை காட்டிலும் இந்தியாவில் அதிக நேரம் செலவிடுவார், இதை தொடர்ந்து மொத்தமாகவும் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications