சீன பெண் உளவாளி + 2 என்விடியா பெண் ஊழியர்களுடன் கள்ள தொடர்பில் இருந்த காரணத்தால் ஜென்சன் ஹுவாங் சிஇஓ பதவியில் வெளியேறிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேரடியாக தலையிட்டு மீண்டும் ஜென்சனுக்கு சிஇஓ பதவியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய உயர்வு பதிவாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த 48 மணிநேரமாக ஜென்சன் உடன் என்விடியா நிர்வாக குழு உடனான கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்விடியா நிர்வாக குழுவிடம் ஜென்சன் ஹுவாங் தனது தனிப்பட்ட உறவுகள் குறித்து பேசியுள்ளார், இதில் சீன பெண் உளவாளியான ஆலீஸ் ஹுவாங், என்விடியாவின் ஹெல்த்கேர் பிரிவின் தலைவரான கிம்பெர்லி பவல், மற்றும் பெயர் வெளியிடப்படாத என்விடியாவின் பெண் ஊழியர் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே வெளியான தகவல்களைத் தாண்டி, மேலும் சில விவரங்களை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் தெரிவித்ததாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
ஜென்சன் மற்றொரு என்விடியா ஊழியருடன் தொடர்பில் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற நீண்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜென்சன் தனது செயல்பாடுகள் குறித்து என்விடியா நிர்வாக குழுவிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், மொத்தம் எத்தனை பெண்கள், கூடுதலான உறவுகள் குறித்து முழுமையான விபரம், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் ஆகிய விபரங்கள் வெளியாகவில்லை.
ஜென்சன் பதிலைக் கேட்ட என்விடியா நிர்வாக குழு நவம்பர் 23ஆம் தேதி ஒருமனதாக மீண்டும் CEO, தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்புகளில் நியமிக்க உள்ளதாக அறிவித்தது. மேலும் என்விடியா நிறுவனத்தில் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
அமெரிக்க அதிபரின் தலையீடு காரணமாகவே ஜென்சனை என்விடியா நிர்வாகம் அவரை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஜென்சன் மீண்டும் தான் சிஇஓ-வக வர விருப்பம் தெரிவித்த போது என்விடியா நிர்வாக குழு ஒருமனதாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் என்ன நடந்தது..?
ஜென்சன் ஹுவாங் மறுநியமனம் குறித்த செய்தி வெளியான பின்பு அமெரிக்க AI மற்றும் தொழில்நுட்பப் பங்குகள் அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக டெக் மற்றும் ஏஐ பங்குகள் அதிகமாக இருக்கும் Nasdaq 100 குறியீடு 6.6% உயர்ந்து 26,680.6 புள்ளிகளை எட்டியது.
இதனால் ஒரே நாளில் Nasdaq-100 சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து ஏஐ முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் என்விடியா பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 31 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. நேற்றைய உயர்வு அனைத்தும் முழுக்க முழுக்க AI RALLY ஆகவே இருந்தது.
ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியாவின் சிஇஓவாக நியமிக்கப்பட்டது மூலம் ஏஐ துறையில் சர்குலர் எக்னாமி பாதுகாக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சிக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications