ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகம் பலன் அடைந்த, சொத்து மதிப்பில் அதிகப்படியான வளர்ச்சியை கண்ட நபர்களில் மிகவும் முக்கியமானவர் என்விடியாவின் ஜென்சன் ஹுவாங். ஏஐ வளர்ச்சியால் சொத்து சேர்த்த இவர் தற்போது கள்ள தொடர்பால் தனது சொத்து மதிப்பை வேகமாக இழந்து வருகிறார்.
ஏஐ தொழில்நுட்பத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியான ஆலீஸ் ஹூவாங் கடந்த 2 வருடங்களாகத் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து என்விடியா பங்குகள் வேகமாக சரிந்து வருகிறது.
இதனால் ஜென்சன் ஹுவாங் சொத்து மதிப்பு கடுமையாக சரிவை சந்தித்து டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சுமார் 6.47 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜென்சன், இந்த வருடம் மட்டும் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதன் மூலம் இவருடைய சொத்து மதிப்பு 148 பில்லியன் டாலராக குறைந்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
மேலும் ஜென்சன் ஹுவாங் மீது என்விடியா நிர்வாகம் தனிப்பட்ட விசாரணையை துவங்க உள்ள நிலையில், இந்த விசாரணையின் முடிவில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உதாரணமாக பில் கேட்ஸ் மீது, மைக்ரோசாப்ட் ஊழியருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தாத குற்றம்சாட்டப்பட்ட போது, இதுதொடர்பாக விசாரணை துவங்கப்பட்டது. ஆனால் விசாரணை முடிவுவதற்கு முன்பே பில்கேட்ஸ் தானாக முன்வந்து மைக்ரோசாப்ட் நிர்வாக குழுவில் இருந்தும், வர்த்தகம் தொடர்பான நேரடி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இன்று மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே இருந்து வருகிறார்.
இதேபோன்ற நிலை ஜென்சன் ஹுவாங்கிற்கும் வரலாம், அல்லது இதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம். காரணம், இந்த கள்ளஉறவு மூலம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான என்விடியாவின் சிப்கள் சீனாவுக்கு மறைமுகமாக அமெரிக்க விதிமுறைகளை தாண்டி சென்றுள்ளதை அமெரிக்க பாதுகாப்பு துறை கண்டுப்பிடித்துள்ளது.
இதனால் விசாரணை முடிவுகள் என்விடியாவின் எதிர்கால நிர்வாகத்தை மாற்றக்கூடியதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதேவேளையில் டிரம்பும், டிரம்ப் அரசும் ஏஐ மீது பெரும் நம்பிக்கை கொண்டு இருக்கும், இதேவேளையில் டிரம்ப் ஜென்சன் ஹுவாங் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் காரணத்தால் விசாரணையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications