3 பெண்களுடன் தொடர்பு? Nvidia முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் பற்றி வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..!!

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தொடர்பாக அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான உள்ளன. அவர் தற்போது என்விடியா நிறுவனத்தில் இருந்து அனைத்துவிதமான பொறுப்புகளில் இருந்தும் விலகி விட்டாலும் தனிப்பட்ட அவரது செயல்பாடுகள் இத்தனை காலம் அவர் உருவாக்கி வைத்திருந்த நற்பெயரை கெடுத்துவிட்டன.

63 வயதான ஜென்சன் ஹுவாங் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது கண்டறியப்பட்டது. அது மட்டுமல்லாமல் நிறுவனத்திலேயே ஒரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது, நிறுவனத்திற்குள்ளேயே பணிபுரியும் மற்றொரு பெண் ஊழியருடனும் அவர் நெருக்கமாக இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்கட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திருமணத்தை மீறி மூன்று பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

3 பெண்களுடன் தொடர்பு?  Nvidia முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் பற்றி வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..!!

ஆலிஸ் ஹுவாங் என்ற சிங்கப்பூரை சேர்ந்த கிளவுட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுடன் ஜென்சனுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்த பெண், சீனாவுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இவருடனான தொடர்பு குறித்து வெளியான தகவலை தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங் தான் தன் மனைவிக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக ஒப்புகொண்டார். தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கேட்டு கொண்டார்.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் என்விடியா நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவு துணை தலைவராகவும், நேரடியாக ஜென்சன் ஹுவாங்கின் கீழ் பணியாற்றியவருமான கிம்பர்லி பவல் என்ற பெண்ணுடனும் அவருக்கு தொடர்பு இருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இந்த சூழலில் என்விடியா நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அந்த பெண் ஊழியரின் பெயர் மற்றும் விவரங்களை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

Also Read

முன்னதாக தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை தொடர்பு குறித்த சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, ஜென்சன் ஹுவாங் தனது சிஇஓ மற்றும் தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஏஐ துறையின் முகமாக அறியப்பட்ட ஜென்சன் ஹுவாங் ஒரு வாரத்திலேயே அந்த பெயரையும் பதவியையும் இழந்துவிடார். அது மட்டுமில்லாமல் அவரது சொத்து மதிப்பும் சரிந்துவிட்டது.

கடந்த 1993-ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை தொடங்கி, அதனை உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக மாற்றியவர் ஜென்சன் ஹுவாங். டெக் உலகின் ஆதிக்கம் நிறைந்த மனிதராக இருந்த ஜென்சன் ஒரே வாரத்தில் வீழ்ச்சி அடைந்து விட்டார்.

Recommended For You

தற்போது நிறுவனத்தின் ரகசியங்கள் எவையாவது கசிந்துள்ளதா என்பது குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நிறுவனத்தின் இரகசியங்களோ அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்போ எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்றே நம்புவதாக வாரியம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+