என்விடியா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓவுமான ஜென்சன் ஹுவாங் சீன பெண் உளவாளி ஆலீஸ் ஹுவாங் மற்றும் என்விடியா ஹெல்த்கேர் பிரிவின் தலைவரான கிம்பர்லி பவல் ஆகிய 2 பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவில் இருந்த விவகாரம் என்விடியா நிர்வாக குழுவைப் புரட்டிப்போட்டு உள்ளது.
கடந்த 2 நாட்களாக ஜென்சன் ஹுவாங் சிஇஓ பதவியில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்று ஜென்சன் ஹுவாங் தானாக முன் வந்து தனது குற்றத்தை பொறுப்பேற்கும் வகையில் என்விடியா நிறுவனத்தின் பிரெசிடென்ட், சிஇஓ, நிர்வாக குழு உறுப்பினர் என அனைத்து நிர்வாக பொறுப்பில் இருந்து உடனடியாக வெளியேறுவதாக அறிவித்து தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட என்விடியா தற்போது உலகளாவிய ஏஐ துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 63 வயதான ஜென்சன் ஹுவாங்-ன் ராஜினாமா என்விடியா நிறுவனத்தில் எதிர்காலம், வளர்ச்சி என அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஜென்சன் ஹுவாங் வெளியேறிய நிலையில் இடைக்கால சிஇஓவாக, தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் கோலெட் கிரெஸ் சிஇஓ பதவியை ஏற்கிறார்.
மேலும் கோலெட் கிரெஸ் தற்போது சிஇஓ மற்றும் சிஎப்ஓ ஆகிய இரண்டு பதவிகளையும் வகிக்க உள்ளார்.
ஜென்சன் ஹுவாங் கள்ள உறவு காரணமாக வெளியேற்றப்பட்டாலும், டெல் உலகில் சொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் புதியது இல்ல. இதற்கு முன்பு பல நிறுவனத்தின் நிறுவனர்கள் இதர காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் நிர்வாகத்துடனான பிரச்சனையின் காரணமாக 1985ல் வெளியேறி LISA என்னும் நிறுவனத்தை உருவாக்கி வெற்றி கண்ட பின்பு மீண்டும் ஆப்பிள் நிர்வாகத்தின் அழைப்பின் காரணமாக 1997ஆம் ஆண்டு திரும்ப வந்தார்.
இதேபோல் சமீபத்தில் ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் உயர்மட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் சிறிய காலம் வெளியேற்றப்பட்டு மீண்டும் சிஇஓ பதவிக்கு வந்தார்.
மேலும் உபர் நிறுவனத்தின் டிராவிஸ் கலாநிக், டிவிட்டர் நிறுவனத்தின் ஜாக் டோர்சி ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் யாரும் கள்ள உறவு காரணமாக வெளியேற்றப்படவில்லை...
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்நிறுவன ஊழியருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தாக குற்றம்சாட்டப்பட்ட போது, இதுதொடர்பாக விசாரணை துவங்கப்பட்டது. ஆனால் விசாரணை முடிவதற்கு முன்பே பில்கேட்ஸ் தானாக முன்வந்து மைக்ரோசாப்ட் நிர்வாக குழுவில் இருந்தும், வர்த்தகம் தொடர்பான நேரடி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தார்.
இன்று மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே இருந்து வருகிறார். பில்கேட்ஸ்-க்கு ஏற்பட்ட இதே நிலை தான் தற்போது என்விடியா சிஇஓ - நிறுவனரான ஜென்சன் ஹுவாங்-கிற்கு ஏற்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
