என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனரும், அதன் தலைமை செயலதிகாரியுமாக இருந்த ஜென்சென் ஹுவாங் கடந்த வாரம் தனது பதவியிலிருந்து விலகிய நிலையில், அவர் மீண்டும் என்விடியா நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஜென்சென் ஹுவாங்கை மீண்டும் நிறுவனத்தின் தலைமை பதவிக்கு கொண்டுவர அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். குறிப்பாக எலான் மஸ்க் உள்ளிட்ட சிலிக்கான் வேலியின் முக்கிய டெக் நிறுவன தலைவர்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். என்விடியா வாரியத்தை ஹுவாங்குக்கு ஆதரவாக அழுத்தம் கொடுக்க செய்வது, வெள்ளை மாளிகையின் ஆதரவை திரட்ட முயல்வது இந்த குழுவின் முக்கிய நோக்கம்.

ஜென்சென் ஹுவாங் சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய பந்தத்தில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். உண்மையை ஒப்பு கொண்ட ஜென்சென் தனது பதவிகளை ராஜினாமா செய்து நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் ஜென்சென் தான் என்விடியாவின் அடையாளம் என கூறி அவருக்கு ஆதரவாக குரல்கள் எழ தொடங்கியுள்ளன.
ஜென்சென் ஹுவாங் விலகியதை அடுத்து, என்விடியாவின் நிதித்துறை முதன்மை அதிகாரியான கோலெட் க்ரெஸ் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். நிறுவனத்தில் ஹுவாங்கிற்கு பெரும்பான்மையான கட்டுப்பாட்டு பங்குகள் இல்லாததால், வாரியத்தின் முடிவுகளை தனியாக மாற்றியமைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. இதனால் தான் டெக் தலைவர்கள், ஊழியர்கள் மூலம் அழுத்தம் தர முன் வந்துள்ளார்.
1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதற்கான ஆவணத்தை தயாரித்து கையெழுத்து இயக்கம் தொடங்கி இருப்பதாக சொல்லபப்டுகிறது. முதலீட்டாளர்கள் சிலரும் ஜென்சென் இல்லை என்றால் எங்கள் முதலீட்டை திரும்ப தாருங்கள் என கூறுவதாக தெரிகிறது. ஆனால் ஜென்சென் ஹுவாங் மீண்டும் திரும்புவதற்கு சில தரப்புகளில் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் ,ஹுவாங்கின் விலகலுக்கு பிறகு என்விடியாவின் தலைமை பொறுப்பு நிறுவனத்தில் இல்லாத புதிய நபரின் ஒப்படைத்து , நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கிடையே, ஹுவாங்கின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து என்விடியா வாரியத்தின் சட்டப்பூர்வமான சுயேச்சை குழு விசாரணை நடத்தி வருகிறது. ஹுவாங் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்விடியா நிறுவனம் தனது காலாண்டு நிதி முடிவுகளை இடைக்கால தலைவர் கோலெட் க்ரெஸ் தலைமையில் வெளியிட உள்ள நிலையில், ஜென்சென் ஹுவாங்கின் எதிர்காலம் மற்றும் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

