எலான் மஸ்க் ஒரு உலகளாவிய கோடீஸ்வரர் என்பதுதான் உங்களுக்கு தெரியும். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதரவளித்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, மஸ்க் தனது சொத்துக்களில் பெரும் உயர்வு கண்டார். கோடீஸ்வரர்களின் அடிப்படையில் மஸ்க் தனது போட்டியாளர்களை விட அதிகரித்துள்ளார். அவரின் டெஸ்லா பங்குகள் 29% உயர்ந்து, மஸ்க்கின் நிகர மதிப்பை $314 பில்லியனாக உயர்த்தியது. ஆனால், இந்தாண்டில் இதுவரை இவரை விட அதிகமாக சம்பாதிக்கும் ஒருவர் உலகில் இருக்கிறார். அவர்தான் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்.
தற்போதைய நிலவரப்படி, 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பில்லியனர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசானின் ஜெஃப் பெசோஸை விட மஸ்க் மிகவும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளார். ஆனால், ஆனால், 2024 இல் மஸ்க்-கை விட அதிக வருமானத்தை என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங் வருமானம் ஈட்டியுள்ளார். ஹுவாங்கின் நிகர மதிப்பு இந்த ஆண்டு இதுவரையில் $84.8 பில்லியன் உயர்ந்துள்ளது. இது மஸ்க்கின் வருவாயை சற்று மிஞ்சியுள்ளது. இந்த ஏற்றம் இருந்தபோதிலும், ஹுவாங்கின் மொத்த சொத்து $129 பில்லியன் ஆகும். இது உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். அவரது நிறுவனமான என்விடியா சிறப்பான செயல்திறனை காட்டி வருகிறது.

சமீபத்தில் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் என்விடியா சமீபத்தில் ஆப்பிளை முந்தி முதலிடத்தில் உள்ளது. தற்போது, என்விடியாவின் சந்தை மதிப்பு $3.621 டிரில்லியன் ஆகும். என்விடியா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. என்விடியாவில் ஹுவாங் 3% பங்குகளை வைத்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக அதிகான வருவாய் ஈட்டியவர்களில் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு $209 பில்லியன் ஆகும். இந்த ஆண்டு இதுவரை அவரது நிகர மதிப்பை $80.5 பில்லியன் அதிகரித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசனின் நிகர மதிப்பு 79.4 பில்லியன் டாலர் அதிகரித்து 202 பில்லியன் டாலராக உள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு அனைத்து பில்லியனர்களுக்கும் மோசனமானதாக உள்ளது. பலர் ஏற்றம் கண்டாலும், சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். பிரெஞ்சு வணிக அதிபரும், LVMH இன் முன்னாள் உலக கோடீஸ்வரருமான பெர்னார்ட் அர்னால்ட் இந்த ஆண்டு அவர் $35.3 பில்லியன் இழப்பை எதிர்கொண்டார். அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு $172 பில்லியன் ஆகும். உலக பில்லியனர் பட்டியலில் அர்னால்டு ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம், பிரான்சின் ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் மற்றும் சீனாவின் சாங் ஷான்ஷன் ஆகியோரும் 2024 ஆம் ஆண்டில் தங்கள் சொத்துக்களை இழந்த நபர்களில் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையில், மஸ்க் உலகளாவிய பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications