விஜய் அமைச்சரவையில் இடம் பிடித்த இரண்டு தொழில் குடும்பங்களின் மருமகன்கள்!! யார் யார் தெரியுமா?

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்றைய தினம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றதை அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துறைகளும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதலமைச்சருக்கு அடுத்ததாக அதிகம் உற்று நோக்கக்கூடிய ஒரு அமைச்சர் பதவியாக இருப்பது நிதி அமைச்சர் தான். அந்த வகையில் முதலில் செங்கோட்டையனுக்கு தான் நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இன்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் மரிய வில்சனுக்கு நிதி அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாற்றி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

விஜய் அமைச்சரவையில் இடம் பிடித்த இரண்டு தொழில் குடும்பங்களின் மருமகன்கள்!! யார் யார் தெரியுமா?

நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே. நகர் எம்எல்ஏ மரிய வில்சன் புகழ்பெற்ற கல்வி குழும தலைவர். தமிழ்நாடு அமைச்சரவையிலேயே வெயிட்டான பார்ட்டியாக இருப்பவர் தான் மரிய வில்சன். புகழ்பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரை தோற்கடித்தார். கடந்த ஆண்டு தான் இவர் தவெகவில் இணைந்தார்.

தமிழ்நாட்டின் பிரபல கல்வி நிறுவன அதிபராக விளங்கியவர் தான் ஜேப்பியார். அவரது மகள் ரெஜினாவின் கணவர் தான் மரிய வில்சன். ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆகவும் ஜேபிஆர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ஜேப்பியார் தீவிர எம்ஜிஆர் விசுவாசியாக இருந்தவர். சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் , மாவீரன் என அதிமுகவினர் அழைக்கப்பட்டவர்.

Also Read

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜேப்பியார் மறைந்தார், 1989அம் ஆண்டே அவர் அரசியலை விட்டு விலகினார். அதன் பின்னர் அவருடைய குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்து அமைச்சர் பதவி வரை உயர்ந்திருப்பது இதுவே முதன்முறையாகும். ஜேப்பியார் கல்வி நிறுவனங்களை தற்போது வழிநடத்தி செல்லக்கூடியவராக மரிய வில்சன் திகழ்கிறார். மேலாண்மை அறிவியல் பிரிவில் பிஹெச்டி முடித்துள்ளார்.

ஜேப்பியார் கல்வி குழுமத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தலைவராக திகழ்ந்து வரும் அவர், டிசைன் திங்கிங் கிளப் என்ற மாணவர்களின் புதுமையான ஆலோசனைகளை ஏற்று நடைமுறைப்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்கியவர். இது தவிர பல்வேறு தொழில் சார்ந்த சொசைட்டிகளையும் அமைத்து மாணவ மாணவிகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

Recommended For You

2011 ஆம் ஆண்டிலிருந்து ஜேப்பியார் கல்வி நிறுவனத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் நிறுவன இயக்குனராகவும் ஜேப்பியார் சர்வதேச பள்ளியின் நிறுவன இயக்குனர் ஆகவும் இருப்பவர். தமிழக அமைச்சரவையில் இரண்டு முக்கியமான தொழில் குடும்பங்களின் மருமகன்கள் இடம்பெற்று இருக்கின்றனர். லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்ப மருமகனான ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது ஜேப்பியார் மருமகனும் முக்கிய பொறுப்பினை பெற்றுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையை பொருத்தவரை இளம் அமைச்சர்களை கொண்டதாகவே இருக்கிறது. மூத்த அமைச்சராக செங்கோட்டையன் இருக்கிறார் அவருக்கு 78 வயதாகிறது.

விஜய் அமைச்சரவையில் இடம் பிடித்த இரண்டு தொழில் குடும்பங்களின் மருமகன்கள்!! யார் யார் தெரியுமா?

அடுத்ததாக நீர்வளத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆனந்த் 62 வயதுடையவர். தமிழ்நாடு அமைச்சரவையில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இரண்டு பேரும், 30 முதல் 40 வயது உடற்பட்டவர்களாக 9 பேரும் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக 11 பேரும் , 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக ஏழு பேரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+