சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்பான செய்திகளை நாம் அடிக்கடி பார்க்க முடிந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வாங்கி இருக்கும் கடன்களை ஒழுங்காகச் செலுத்தவில்லை, ஜெட் ஏர்வேஸ் தன் ஊழியர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கவில்லை, ஜெட் ஏர்வேஸ் வியாபாரம் செய்த பலருக்கும் பேமெண்ட் பாக்கி வைத்து இருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் எரிபொருளுக்கான பணத்தை முறையாகச் செலுத்தவில்லை, ஜெட் ஏர்வேஸ் குத்தகைக்கு எடுத்து இயக்கிக் கொண்டிருந்த விமானங்களுக்கான குத்தகைக் கட்டணத்தை முறையாகச் செலுத்தவில்லை என பல புகார்கள் வந்து கொண்டு இருந்தன.
கடைசியில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தான் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல், பாக்கித் தொகைகளைச் செலுத்த முடியாமல் திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை யாராவது வாங்குவார்களா..? என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தார்கள், ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள், வங்கி சொல்லும் விலைக்கு, ஜெட் ஏர்வேஸை வாங்க, யாரும் முன் வரவில்லை.

கடைசியாக இப்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன சொத்து பத்துக்களை எல்லாம் விற்று, கடனை மீட்டுக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருப்பினும் இந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் விலை கடந்த அக்டோபர் 22, 2019-ல் இருந்து விலை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
என்ன 5 - 10 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்குமா..? என அலட்சியமாக கேட்காதீர்கள். சுமாராக 50 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது. கடந்த அக்டோபர் 22, 2019 அன்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் குறைந்தபட்ச விலை 14.70 ரூபாய். இன்று அதே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் விலை 22.6 ரூபாய்.
கடந்த எட்டு வர்த்தக நாட்களாகவே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் 5 சதவிகித அப்பர் சர்க்யூட்டை தொட்டு வர்த்தகம் ஆகாமல் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்பதை இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
இப்படி திடீரென திவால் ஆன ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளின் விலை அதிகரிப்பதற்கு, சினெர்ஜி என்கிற நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்க முன் வந்திருப்பது தான் காரணம் என்கிறார்கள் சில முதலீட்டாளர்கள். இருப்பினும் இந்த பங்குகளில் முதலீடு செய்யும் போது மிக மிக ஜாக்கிரதையாக, ஆலோசித்து முடிவு எடுக்கவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications