கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிறுவனரான நரேஷ் கோயல், 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 16வது பணக்காரராக அறிவிக்கப்பட்டார். அப்போது இந்திய விமானப் போக்குவரத்து துறையே இவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 74 வயதான மும்பையின் ஆர்தர் சாலையில் சிறையிலிருந்து தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைச் சந்திக்க வெளியே வந்தார். இப்போது அவரைப் பலர் புகைப்படம் எடுத்தனர்.

கடந்த வாரம் நரேஷ் கோயல் வாழ்வில் எந்த நம்பிக்கையும் இல்லை, சிறையிலேயே என் உயிர் பிரிந்தால் போதும் என நீதிமன்றத்தில் சமீபத்திய விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் பல உடல்நல பாதிப்புகள் உடன் போராடுவதாகவும், நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறியதன் மூலம் நரேஷ் கோயல் வரத்தக உலகில் தலைப்பு செய்தியாக மாறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நரேஷ் கோயல் சிறையில் உள்ளார். பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க இயக்குனரகம் அவரைக் கைது செய்து மும்பை சிறையில் அடைத்துள்ளது. கனரா வங்கி அளித்த புகாரின் பேரில் ED விசாரணையை தொடங்கி நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் காஸ்ட்லியான கோட், சூட் உடன் வலம் வந்த நரேஷ் கோயல், தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த போது வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்து, வெட்டப்படாத தாடி மற்றும் சோர்வாகத் தோன்றும் கண்களுடன் வந்தார். சிறையில் இருந்து நரேஷ் கோயல் வெளியான போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
பழைய போட்டோக்களையும், தற்போதைய போட்டோ-வை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நரேஷ் கோயல் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது தெரிகிறது. ஜனவரி 13 அன்று, படுத்த படுக்கையான மனைவி அனிதா கோயலைச் சந்திக்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றதைத் தொடர்ந்து கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நரேஷ் கோயல் அப்போது எடுக்கப்பட்ட படம் தான் இது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications