ஆறு மாதங்களுக்கு மேலாக விமான சேவையை நிறுத்திய நிலையில் கூட, கடந்த 11 வர்த்தக நாட்களில் 76 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
கடந்த அக்டோபர் 18ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 15.85 ரூபாயாக இருந்தது. இது இன்று பி.எஸ்.இயில் 25.55 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் பங்கு விலை 27.90 ரூபாய் வரை சென்று, பின்பு 25.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இதே பி.எஸ்.இயில் 5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 25.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே என்.எஸ்.இயில் 2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 25.55 ஆக முடிவடைந்துள்ளது.
ஒரு நிறுவனம் செயல்பாட்டில் இல்லாத போது, அதுவும் வெறும் 11 அமர்வுகளில், பங்குகளின் உயர்வு முதலீட்டாளர்களையும், ஆய்வாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 18ம் தேதி இந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு ஏற்றத்தை கண்டுள்ளது. இதற்கு காரணம் இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறது. இதன் மூலம் அதன் பங்குதாரர்களுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடன் நெருக்கடியால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது சேவையினை நிறுத்திய ஆறு மாதங்களுக்கு மேலாக தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்ற விமான நிறுவனங்களுக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 30,907 கோடி ரூபாய் மதிப்புள்ள உரிமைக் கோரல்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி விமான சேவையானது, அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில் இதுவரை இந்த நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன் வராத நிலையில், இந்த நிறுவனம் தற்போது திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications