இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வது போல் விமான எரிபொருள் விலையும் உயர்த்தி வருகிறது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய விமான எரிபொருள் சப்ளை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 3.6 சதவீதம் அதாவது 2,354 ரூபாய் அதிகரித்து 68,262 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
விமான எரிபொருள் விலை கடந்த 15 நாட்களில் சுமார் 2 முறை அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில், விமான நிறுவனங்கள் இந்த விலை உயர்வைச் சமாளிக்க விமானப் பயணக் கட்டணத்தை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வரும் வேளையிலும், கொரோனா காலத்தில் புதிதாக விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்த இந்த வேளையில் இத்துறை வர்த்தக வளர்ச்சி எரிபொருள் விலை உயர்வின் மூலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசலை போலவே விமான எரிபொருளுக்கும் மாநில அரசு வரி விதிக்கிறது. இதன் அடிப்படையில் மாநில அரசும் விமான எரிபொருள் மூலம் மாநில அரசும் வருமானம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications