உலகம் முழுவதுமே தங்கம், வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டது குறித்து தான் பேசப்படுகிறது. அதிலும், வெள்ளியின் விலை அண்மை காலமாக மிக வேகமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வெள்ளியின் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகள் மட்டுமில்லாமல் தொழில்துறை ரீதியாக வெள்ளிக்கான தேவை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.
உலக அளவில் வெள்ளிக்கான தேவை அதிகரித்து இருக்கிறது ஆனால் அதற்கு ஏற்ப சப்ளை இல்லை. இதுதான் டிமாண்ட் அதிகரித்து விலையை உயர்த்த செய்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் வெள்ளி விலை உயர்வில் மோசடி நடப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் அதாவது எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை சர்வதேச சந்தை விலையை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த அசாதாரண உயர்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக நகை வியாபாரிகள் அமைப்பு கூறியிருக்கிறது. இந்திய நகை வியாபாரிகள் அமைப்பு இது தொடர்பாக ஜனவரி 21ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
பொதுவாகவே வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களுக்கு சர்வதேச விலைக்கும் உள்நாட்டு விலைக்கும் இடையே சிறிய வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் இப்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை சர்வதேச சந்தையை விட சுமார் 40,000 வரை கூடுதலாக வர்த்தகம் செய்யப்படுகிறது என நகை வியாபாரிகள் அமைப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இது மிகவும் அசாதாரணமானது என நகை வியாபாரிகள் அமைப்பு தெரிவிக்கிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் வெள்ளிக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படலாம் என்ற தகவல் சந்தையில் பரவி வருகிறது. இதனால் விலைகள் முன்கூட்டியே கடுமையாக உயர்ந்துள்ளன என சொல்லப்படுகிறது. மத்திய அரசிடம் வெள்ளிக்கான வரியை உயர்த்தும் திட்டம் உள்ளதா அதனை பட்ஜெட்டில் அறிவிக்க போகிறார்களா? அப்படி இருந்தால் முன் கூட்டியே அந்த தகவல் எப்படி கசிந்தது , இவ்வாறு தகவலை கசிய விட்டு யார் லாபம் பார்த்தால் என விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் விலை உயர்வு சாதாரணமானது அல்ல இதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது Manipulation நடந்து இருக்கிறதா என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி அசாதாரணமாக உயர்த்தப்பட்ட விலைகளால் சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என நகை வியாபாரிகள் அமைப்பு கூறியுள்ளது.10 நாட்களுக்கு முன்பாகவே வெள்ளி விலை அசாதாரணமாக உயர்த்தப்படுகிறது, Manipulation நடக்க போகிறது என்பது குறித்து செபிக்கு கடிதம் எழுதியதாக நகை வியாபாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications