சில காலமாகவே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த விலை உயர்வு தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்கு நன்மை அளித்தாலும், புதிதாக நகை வாங்கயிருப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடர் விலை உயர்வால், கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கம் விலை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இப்படி தங்கம் புதிய உச்சத்தை எட்டி வருவதால் நகை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக புது புது உத்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர். முன்னணி நகை பிராண்டுகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பிராண்டுகள் குறைந்த தரம் மற்றும் குறைந்த எடை கொண்ட நகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

பொதுவாக தங்கம் 22 கேரட், 24 கேரட், 18 கேரட் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. 24 கேரட் தங்கத்தில் 99.9% தூய தங்கம் இருக்கும். 22 கேரட்டில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதோடு பிற உலோகங்களான சில்வர் மற்றும் காப்பர் கலந்து நகைகள் செய்யப்படும். 18 கேரட் தங்கத்தில் 22 கேரட், 24 கேரட் தங்கத்திற்கும் குறைவான தங்கம் இருக்கும். இதனால்தான் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தை விட 18 கேரட் தங்கம் விலை குறைவாக உள்ளது. தற்போது சந்தையில் 9 கேரட் தங்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வை கண்டு தயங்கி கொண்டு நகை வாங்க முடியாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் அதற்கு பதிலாக அதிக கற்கள் பதிக்கப்பட்ட, குறைந்த எடையுள்ள நகைகளை வாங்கிக் கொள்ளலாம். தற்போதைய விலை உயர்வு, நகை வியாபாரிகளின் இந்த புதிய முயற்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. 24 கேரட் தங்கம் தான் விலை உயர்ந்த தங்கம். ஆனால் இது மிகவும் மென்மையாக இருப்பதனால் இதில் காயின்கள் மற்றும் தங்க பார்கள் மட்டுமே செய்ய முடியும்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியன்று 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை எட்டியது. பொருளாதார மந்த நிலை, நீடித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தகப் பதட்டங்கள் போன்ற காரணங்களால் மக்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதிக விலை கொண்ட நகைகளை மக்கள் ஒருபுறம் வாங்கிக் கொண்டிருந்தாலும், சாமானியர்கள் இன்னும் விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக தான் தற்போது குறைந்த கேரட் மற்றும் குறைந்த எடையுள்ள நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டைட்டன் நிறுவனம் தனது 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை அறிவித்தபோது ரூ.50,000 மற்றும் அதற்கும் குறைவான விலையில் நகைகள் வாங்கியவர்கள் குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு நேர் மாறாக அதிக கற்கள் பதிக்கப்பட்ட நகைகளில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதிக கற்கள் உள்ள நகைகளில் குறைவான தங்கம் இருப்பதால் இது வாங்குவதற்கு மலிவாக உள்ளது. இதன் காரணமாக டைட்டன் மற்றும் கல்யாண ஜுவல்ஸ் ஆகிய நிறுவனங்கள் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்த வகை நகை பிரிவில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
பொதுவாக கற்கள் பதிக்கப்பட்ட நகைகளில் 40 முதல் 45 சதவீதம் வரை கற்கள் இருக்கும். விலை உயரும் போது கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்குபவர்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை உயரும் போதெல்லாம் 18 கேரட், 22 கேரட் தங்கமாக இருந்தால் குறைந்த எடை மற்றும் நடுத்தர எடை கொண்ட நகைகளை செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை 2026-ஆம் நிதியாண்டில் விற்பனையில் ஏற்படும் லாபத்தை குறைக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தற்போது 18 கேரட் தங்கத்தை வாங்கத் தொடங்கிய மக்கள் இப்போது 16 கேரட் மற்றும் 9 கேரட் போன்றவற்றையும் வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் குறைந்த கேரட் தங்க நகைகளுக்கு இன்னும் அவ்வளவாக வரவேற்பு இல்லை. அப்பகுதியில் உள்ளவர்கள் அதிக கேரட் மதிப்பை கொண்ட தங்கத்தையே வாங்க விரும்புகின்றனர். தங்கம் விலை உயரும் சமயத்திலும் இதே நிலை தொடருமா? அல்லது குறைந்த கேரட் கொண்ட தங்கத்தை மக்கள் வாங்க தொடங்குவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications