தனியார் நிறுவனங்கள் பல பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசியை இலவசமாக அறிவித்து வருகின்றன.
இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கமானது, மிக மோசமாக இருந்து வரும் நிலையில், பாதிப்பும் கணக்கிட முடியாத அளவு இருந்து வருகின்றது.
இதற்கிடையில் பல உலக நாடுகளும், நிறுவனங்களும், என்ஜிஓ-க்கள், தனி நபர்கள் என பலரும், இந்தியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி உள்பட பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
ஊழியர்களுக்கு தடுப்பூசி
அந்த வகையில் இந்தியாவில் டாமினோஸ் பீட்சா மற்றும் டங்கின் டோனட்ஸ் உள்ளிட்ட உணவு சங்கிலிகளை இயக்கும், ஜீபிலியன்ட் ஃபுட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், அதன் 30,000 ஊழியர்களுக்கும், அவர்களது குடுபத்தினருக்கும் நிறுவனத்தின் சார்பில் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தினை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
செலவினை நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்
ஜீபிலியன்ட் நிறுவனம் டெல்லி/ என்சிஆரில் உள்ள ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த தடுப்பூசி திட்டத்தினை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான செலவினங்களை ஜீபிலியன்ட் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. இது JFLல் குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
24 மணி நேர ஹெல்ப்லைன்
இதில் டாமினோஸ் பீட்சா, டங்கின் டோனட்ஸ், ஹாங்ஸ் கிட்சன், செஃப்பாஸ் மற்றும் எக்டூம் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும் என்றும் அறிவித்துள்ளது. இது கொரோனாவின் மோசமான இரண்டாவது அலைக்கு மத்தியில், ஊழியர்களுக்கு உதவும் வகையில் நிறுவனம் இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவ்த்துள்ளது. இது தவிர 24 மணி நேரமும் உதவும் வகையில் ஹெல்ப்லைன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேவையான மருத்துவ வசதிகள்
இது தவிர மும்பை, பெங்களூர், சென்னை, நொய்டா மற்றும் இண்டூர் உள்ளிட்ட சில இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகளையும் அமைத்துள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான மருந்து வசதிகளை பெறவும் தேவையான வசதிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தவிர கொரோனாவால் ஊழியர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு, சில சலுகைகளை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications