இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியாளரான ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் (JSL), இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட நிக்கல் பிக் அயர்ன் (NPI) நிறுவனமான New Yaking Pte இல் 49 சதவீத பங்குகளை சுமார் 157 மில்லியன் டாலர் அதாவது 1300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மற்றும் முதலீடு மூலம் நிறுவனத்திற்கு அலாய் தயாரிப்புக்கு தேவையான முக்கிய உள்ளீடு பொருளான நிக்கல் சப்ளையை உறுதி செய்ய உதவும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபியுதாய் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜிண்டால் இந்தோனேசியாவில் New Yaking Pte உடன் ஒரு கூட்டு நிறுவனத்தை அமைக்கும், அதே நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஜிண்டால் நிறுவனத்திற்கு பல வகையில் பலன் அளிக்கும்.
இந்தியாவில் நிக்கல் தாது தட்டுப்பாடு!
ஜிண்டால் நிறுவனத்தின் வருடாந்திர 2.9 மில்லியன் டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்திக்கு, 125 டன் நிக்கல் தேவைப்படுகிறது எனவும், இந்தியாவில் நிக்கல் தாது போதுமான அளவு இல்லை, எனவே அதை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நிக்கல் கனிமம்
மேலும் நிக்கல் கனிமம், ஜிண்டால் நிறுவனத்தின் உள்ளீட்டு செலவில் 50% ஆக இருப்பதாலும் நாட்டில் நிக்கல் பற்றாக்குறை உள்ளதாலும், அதை 5-16% NPI வழியே பெறப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
2,00,000 மெட்ரிக் டன் நிக்கல்!
இந்த ஒப்பந்தம் மூலம் NPI இடமிருந்து ஆண்டுக்கு 2,00,000 மெட்ரிக் டன்கள் வரையிலான அதாவது 14% நிக்கல் பெறுவது உட்பட 2 ஆண்டுக்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு தவணை!
ஜிண்டால் நிறுவனம் இந்த ஒப்பந்ததிற்காக முதலீட்டுத் தொகையை இரண்டு தவணைகளில் செலுத்தும் என அறிவித்துள்ளது. அதன்படி 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ.750 கோடியும், 2024-25 ஆம் ஆண்டிற்குள் ரூ.550 கோடியும் முதலீடு செய்யும் என கூறியுள்ளது.
ஜிண்டால் குழுமம்!
OP ஜிண்டால் குழுமத்தின் ஒரு பகுதியாக, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பாளராக உள்ளது. இந்நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 2.9 மில்லியன் டன்கள் ஸ்டீல்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
சர்வதேச வர்த்தகம்
இந்நிறுவனம் இந்தியாவில் ஹரியானா மற்றும் ஒடிசாவிலும், இந்தோனேசியாவில் உற்பத்தி வளாகங்களைக் கொண்டுள்ளது.
மேலும் இந்தியாவில் 6 சேவை மையங்களும், ஸ்பெயினில் ஒரு சேவை மையத்தையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications