இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்ய அனைத்து நிறுவனங்களும் தயாரான நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
இது மட்டும் அல்லாமல் 5ஜி சேவைக்கு வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் ஜியோ இலவச வெல்கம் ஆஃப்ரையும் அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இந்த இலவச ஆஃபர் அனைவருக்கும் கிடைக்காது.
யாருக்கெல்லாம் ரிலையன்ஸ் ஜியோ-வின் 5ஜி சேவைக்கான இலவச வெல்கம் ஆஃபர் கிடைக்கும்..? இந்த ஆஃபரில் என்ன உள்ளது..?
தசரா பண்டிகை
தசரா பண்டிகை நாளை அதாவது அக்டோபர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இந்தப் பண்டிகை நாளில் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி ரிலையன்ஸ் ஜியோ தனது True 5G சேவையின் பீட்டா டிரையல்-ஐ செய்ய உள்ளது.
ஜியோ 5ஜி சேவை
மேலும் இந்தப் பீட்டா ட்ரையல் இந்தியா முழுவதும் செய்யாமல் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் மட்டுமே சோதனை செய்ய உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சென்னைக்குப் பதிலாக வாரணாசியைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இதுபோன்ற சேவைக்குச் சென்னையைத் தேர்வு செய்யும்.
வெல்கம் ஆஃபர்
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை 5ஜி சேவையைப் பயன்படுத்திப் பார்க்க அழைத்துள்ளது. இதன் மூலம் ஜியோவின் True 5G சேவையைத் தனது வெல்கம் ஆஃபர் கீழ் பயன்படுத்திப் பார்க்கும் அனைவருக்கும் ஒரு நொடிக்கு 1 ஜிகாபிட் வேகத்துடன் கூடிய 5 ஜிபி இண்டர்நெட் டேட்டாவை இலவசமாக அளிக்கிறது.
5ஜிபி அதிவேக இண்டர்நெட் டேட்டா
இந்த 5ஜிபி அதிவேக இண்டர்நெட் டேட்டா மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற பகுதி மக்களுக்கு ஜியோவின் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள்
தற்போது ஜியோ நிறுவனம் அழைத்துள்ள வாடிக்கையாளர் அனைவருக்கும் 'Jio Welcome Offer' மூலம் 5ஜி சேவை கிடைக்கும். அழைக்கப்படாத வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது என்பதையும் ஜியோ விளக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications