பட்டையைக் கிளப்பும் ஜியோ.. பாவம் ஏர்டெல்..!

ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் வர்த்தகத்தையும் கைப்பற்றத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து புதுப்புது திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. ஆனால் மறுமுனையில் இருக்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தற்போது இருக்கும் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைக் காப்பாற்றப் போராடி வருகிறது.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சுமார் 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, ஆனால் சக போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர் அளவீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக 45 லட்சம் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்கில் சேர்த்துள்ளது.

இதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 397 மில்லியனாக உயர்ந்துள்ளது.

 

ஏர்டெல் மற்றும் VI

ஏர்டெல் மற்றும் VI

இதே ஜூன் மாத காலகட்டத்தில் பார்தி ஏர்டெல் 11.2 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 48.2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்குப் பின்பும், லாக்டவுனாவ் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் பெருமளவிலான பியூச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் இணைப்பை துண்டித்துள்ளனர்.

 

கட்டண உயர்வு

கட்டண உயர்வு

கடந்த 3 வருடத்தில் முதல் முறையாக டிசம்பர் 2019இல் டெலிகாம் நிறுவனங்கள் வருமான இழப்பைத் தாங்க முடியாமல் சுமார் 14 முதல் 33 சதவீதம் வரையில் டெலிகாம் சேவைக்கான கட்டணங்களை உயர்த்தியது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள்.

இது சாமானிய மக்கள் கடுமையாகப் பாதித்தது என்றால் மிகையில்லை.

 

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூன் மாதத்தில் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 397.24 மில்லியனாக உயர்ந்து மொத்த சந்தை வர்த்தகத்தில் 34.82 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 316.67 மில்லியனாகக் குறைந்துள்ளது சந்தை வர்த்தகத்தின் ஆதிக்கம் 27.78 சதவீதத்தில் இருந்து 27.76 சதவீதமாகச் சரிந்துள்ளது.

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 305.10 மில்லியனாகக் குறைந்த 26.75 சதவீத வர்த்தகச் சந்தையைப் பெற்றுள்ளது.

 

இந்திய டெலிகாம்

இந்திய டெலிகாம்

ஜூன் மாத முடிவில் இந்திய டெலிகாம் துறையில் சுமார் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 32 லட்சம் குறைந்து 114 கோடியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+