குட்டி டப்பா.. Reliance Jio-வின் அடுத்த சூறாவளி அறிவிப்பு.. முகேஷ் அம்பானி கில்லாடி தான்..!
இந்தியாவின் டெலிகாம், இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவை தளத்தை புரட்டிப்போட்ட முகேஷ் அம்பானி - ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ பிராண்ட்பேன்ட் சேவையில் புதிய புரட்சியை செய்ய வருகிறது. 4ஜி சேவை மூலம் இந்திய டெலிகாம் சேவையிலும், டேட்டா பயன்பாட்டிலும் பெரும் மாற்றத்தை கொண்ட ஜியோ 5ஜி சேவையிலும் முன்னோடியாக இருக்கும் வேளையில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் Jio AirFiber என்ற புதிய பிராண்ட்பேன்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 45வது வருடாந்திர பொது கூட்டத்தில் Jio AirFiber குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் இதன் விலை, அறிமுக நாள், வேகம் போன்ற முக்கியமான தரவுகளை ரிலையன்ஸ் ஜியோ வெளியிடவில்லை.

ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பம் முதல் வெறும் டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில் 5ஜி உதவியுடன் தற்போது தனது முக்கிய கனவு திட்டமான connected homes strategy-ஐ நோக்கி பயணிக்க துவங்கியுள்ளதாக ரிலையன்ஸ் தலைவர் கிரன் தாமஸ் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ்-ன் connected homes strategy திட்டத்தின் அடிப்படையே இந்திய வீடுகளில் அதிவேக இண்டர்நெட் சேவையை கொண்டு வருவது தான். இதை சாத்தியப்படுத்தும் வகையில் பைபர் இணைப்பு மூலம் கிடைக்கும் இண்டர்நெட் வேகத்திற்கு இணையாக வயர்லெஸ் இணைப்பு மூலம் வழங்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் Jio AirFiber.
Jio AirFiber மூலம் வீடுகளிலும், சிறிய அலுவலகத்திலும் 1Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவையை வயர்லெஸ் வாயிலாக அளிக்க முடியும். இது மட்டும் அல்லாமல் Jio AirFiber-க்காக உருவாக்கப்பட்டு உள்ள கருவியில் 5G technology, Wi-Fi 6 ஆகியவை செயல்படுத்தக்கூடியவை. இதுமட்டும் அல்லாமல் இந்த கருவி மூலம் ஜியோ செட் டாப் பாக்ஸை இணைக்க முடியும்.
Jio AirFiber மூலம் 1000 சதுரடி வரையிலான வீட்டில் அல்லது ஓரே floor-ல் இருக்கும் அலுவலகத்தில் 1.5 Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவையை அளிக்க முடியும் என்பதை True 5G சேவை மூலம் சோதனை செய்து வெற்றிக்கண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ. Jio AirFiber கருவியை எளிதாக பிளக் இன் செய்து ஆன் செய்தால் போதுமானது.

Jio AirFiber வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ தனது பிராட்பேன்ட் சேவையை அதிகாரப்பூர்வமாக 4 ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பிராட்பேன்ட் சேவை அளிக்கும் ஏர்டெல், BSNL, ACT ஆகியவைக்கு பெரும் போட்டி உருவாகும். மேலும் Jio AirFiber முழுவதும் ரிலையன்ஸ் ஜியோவின் சொந்த தொழில்நுட்பம்.
இந்திய பிராட்பேன்ட் சேவை தளத்தை தலைகீழாக புரட்டிப்போட போகும் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த சில வாரத்தில் Jio AirFiber-ஐ அறிமுகம் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. சந்தை கணிப்புகள் படி ஐபிஎல் போட்டிகள் முடியும் முன்னர் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் Jio AirFiber-ன் கட்டணம் குறித்து இதுவரை எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை என்பது வருத்தமான செய்தி.
Jio AirFiber பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..? Jio AirFiber பிராட்பேன்ட் சேவையை நீங்க வாங்குவீங்களா..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications