ரிலையன்ஸ் ஜியோ புதிதாக 3 மாத திட்டங்களை தனது ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிக்ஸடு வயர்லெஸ் ஆக்சஸ் சர்வீஸ் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.
முன்னதாக ஜியோ ஏர்ஃபைபர் பிளான்கள் 1, 6, 12 மாத வேலிடிட்டியுடன் வழங்கியது. இந்த புதிய 3 மாத திட்டம் 30 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிஎஸ் வேகத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ட்ரி லெவல் 30 எம்பிபிஎஸ் திட்டம் மாதம் ரூ.599 கட்டணமாகும். இதில் 1000 ஜிபி டேட்டாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், ஹோய்சாய், டிஸ்கவரி+, ஏஎல்டி பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே, ஷெர்மாரூமே, டோகுபே, எபிக்ஆன், ஈடிவி வின் ஆகிய 14 ஓடிடி தளங்களையும் பார்க்கலாம்.
இத்துடன் 800க்கும் மேற்பட்ட டிமாண்ட் டிவி சேனல்கள் பார்க்கலாம். மாறாக ரூ.888 பிளானில் ரூ.599 பிளானில் உள்ள அதே சலுகைகளைப் பெறலாம். கூடுதலாக நெட்பிளிக்ஸ்- பேஸிக், அமசான் பிரைம் லைட் சந்தாவும் கிடைக்கும்.
ஹைஸ்பீடு விரும்புவோருக்கு 100 எம்பிபிஎஸ் பிளான் இரண்டு அடுக்குகளாக வழங்கப்படுகிறது. மாதம் ரூ.899 கட்டணத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் ஓடிடி சேனல்களைப் பார்க்கலாம். மாதம் ரூ.1199 கட்டணத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் சந்தாக்களும் கிடைக்கும்.
ஜியோ காலாண்டு பிளான்கள் 300 எம்பிபிஎஸ், 500 எம்பிபிஎஸ், 1 ஜிபிஎஸ் வேகத்தில் தலா ரூ.1499, 2499, ரூ.3999 ஆகிய கட்டணத்தில் கிடைக்கும்.
ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெறும் முறை:
உங்கள் பகுதியில் ஜியோ ஏர்ஃபைபல் இணைப்பு உள்ளதா என்பதை ஜியோ மைஆப்பை பயன்படுத்தி ஜியோ இணையதளத்தில் சென்று பார்க்கவும். அல்லது கஸ்டமர் கேரில் தெரிந்து கொள்ளலாம்.
புக்கிங் முறை: 60008-60008 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரவும். ஜியோ வெப்சைட்டுக்கு சென்று அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ஜியோ ஸ்டோருக்கு சென்று பதியவும்.
பதிவு: தேவையான தனிப்பட்ட ஆவணங்களை அளித்து ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை பெறலாம்.
இன்ஸ்டலேஷன்: இணைப்பு உறுதியானவுடன் ஜியோ உங்களுக்கு ஜியோ ஏர்ஃபைபர் பேக்கேஜ் உங்கள் லொகேஷனுக்கு ஏற்றபடி அனுப்பும். இதைத் தொடர்ந்து ஒரு டெக்னீஷியன் வந்து இன்ஸ்டலேஷனை செய்து தருவார்.
புதிய 3 மாத திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக இன்டர்நெட் சேவையை கூடுதல் வேகத்துடன் வாடிக்கையாளர்களின் குறுகிய கால விருப்பத்துக்கு ஏற்ப தருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ரிலையன்ஸ் ஜியோ நடவடிக்கை எடுத்துள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications