இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ பிக்சட் வயர்லெஸ் ஆக்சஸ் பிரிவின் கீழ் புதிய ஜியோ ஏர்ஃபைபர் சேவை திட்டத்தை கொண்டு வர உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்த மாபெரும் திட்டம் அறிமுகத்திற்கான பணிகளை பல மாதங்களாக செய்து வந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. JIO Airfiber 5ஜி பிராட்பேண்ட் சேவையை அடுத்த 2 வருடத்தில் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது.

4ஜி சேவை மூலம் இந்திய டெலிகாம் சேவையிலும், டேட்டா பயன்பாட்டிலும் பெரும் மாற்றத்தை கொண்ட ஜியோ 5ஜி சேவையிலும் முன்னோடியாக இருக்கும் வேளையில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் Jio AirFiber என்ற புதிய பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. 46வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஜியோ 50 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
Jio AirFiber திட்டம் மூலம் ஜியோ ஸ்மார்ட்ஹோம் சேவைகளை கொண்டு வர உள்ளதாக 46வது வருடாந்திர கூட்டத்தில் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இதுநாள் வரையில் நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்து வந்த Jio AirFiber திட்டம் தற்போது வீடுகளுக்கு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பம் முதல் வெறும் டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஆகாஷ் அம்பானியும், முகேஷ் அம்பானியும், 5ஜி உதவியுடன் தற்போது தனது முக்கிய கனவு திட்டமான connected homes strategy-ஐ நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர்.
Jio AirFiber-க்காக உருவாக்கப்பட்டு உள்ள கருவியில் 5G technology, Wi-Fi 6 ஆகியவை செயல்படுத்தக்கூடியவை. இதுமட்டும் அல்லாமல் இந்த கருவி மூலம் ஜியோ செட் டாப் பாக்ஸை இணைக்க முடியும். Jio AirFiber மூலம் 1000 சதுரடி வரையிலான வீட்டில் அல்லது ஒரே floor-ல் இருக்கும் அலுவலகத்தில் 1.5 Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவையை அளிக்க முடியும்.
இந்திய பிராட்பேண்ட் சேவை தளத்தை தலைகீழாக புரட்டிப்போட போகும் ரிலையன்ஸ் ஜியோ-வின் ஜியோ ஏர்ஃபைபர் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications