இந்தியாவில் டெலிகாம் சேவை கடந்த 5 வருடத்தில் பெரிய அளவில் மேம்பட்டு இருப்பது மட்டும் அல்லாமல் 5ஜி சேவையை தொடர்ந்து 6ஜி சேவையில் கூட்டு ஆராய்ச்சிக்கும், ஆய்வுக்கும் ஜி20 நாடுகள் உடன் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சேவையில் 5ஜி சேவையை கொண்டு வந்துள்ளது.
பைபர் இண்டர்நெட் இணைப்பில் கிடைப்பது போல் 1.5 ஜிபிபிஎஸ் வரையிலான வேகத்தில் இண்டர்நெட் சேவையை வெறும் வைபை சேவையில் 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாக வழங்கி வருகிறது. இது ஹோம் இண்டர்நெட் சேவையில் மிகவும் முக்கியமான தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய சேவையை இதற்கு முன்பு ஏர்டெல் அளிக்க துவங்கிய நிலையில், ரிலையின்ஸ் ஜியோ அறிமுகம் செய்தது. ஜியோ இந்த 5ஜி பிராட்பேண்ட் சேவையை முதலில் அலுவலகங்களுக்கும், வர்த்தக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடாந்திர கூட்டத்தில் ரீடைல் வாடிக்கையாளர்களுக்கும் அளிக்க உள்ளதாக அறிவித்தது.
இதன் படி இன்று மும்பையில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது ஏர்பைபர் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இந்த அதிவேக இண்டர்நெட் சேவை மூலம் 4K வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை, சிறப்பான ஆன்லைன் கேமிங், லேகிங் இல்லாத வீடியோ கான்பிரென்சிங் சேவைகளை பெறலாம்.
ஜியோ ஏர்பைபர் சேவையில் சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவையை பெற வெறும் 100 ரூபாய் கொடுக்கு முன்பதிவு செய்தால் போதுமானது, இந்த 100 ரூபாயும் மொத்த பில் தொகையில் இருந்து கழிக்கப்படுவதாக ஜியோ தெரிவித்துள்ளது.
இந்த சேவையை பெற 60008 60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க அல்லது www.jio.com என்ற தளத்திற்கு சென்று புக் செய்யுங்கள். இந்த ஒரு திட்டத்தின் கீழ் நவீன வைபை ரவுட்டர், 4கே ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ், வாய்ஸ் ஆக்டிவேடெட் ரிமோட் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
ஜியோ ஏர்பைபர் திட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய 8 நகரங்களில் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் விலை 6000 ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இன்ப அதிர்ச்சியாக 3 கருவிகளையும் இலவசமாக வழங்க உள்ளதாக ஜியோ தளத்தில் தெரிவித்துள்ளது.
ஜியோ ஏர்பைபர் திட்டத்திற்கான கருவிகள் இலவசமாக வாங்கிய பின்பு மாத கட்டணம் இண்டர்நெட் வேகத்திற்கு இணையாக வசூலிக்கப்படுகிறது. ஜியோ இரு பிரிவில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது, ஏர்பைபர், ஏர்பைபர் மேக்ஸ்.
30 MBPS திட்டத்திற்கு 599 ரூபாயும், 1000 MBPS திட்டத்திற்கு 3999 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரு திட்டத்தின் கீழ் சுமார் 6 கட்டணங்களில் சேவை அளிக்கிறது ஜியோ. மேலும் 12 மாதம் மொத்தமாக பணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் இன்ஸ்டாலேஷன் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
மேலும் இந்த ஏர்பைபர் திட்டத்தில் 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல், கேட்ச்அப் டிவி சேவை, 16-க்கும் அதிகமான OTT ஆப்களை பயன்படுத்த முடியும்.

More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications