இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ பிக்சட் வயர்லெஸ் ஆக்சஸ் பிரிவின் கீழ் புதிய ஜியோ ஏர்ஃபைபர் சேவை திட்டத்தை கொண்டு வர உள்ளதாகவும், இதற்கான பணிகளை பல மாதங்களாக செய்து வந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் விழாக்காலத்தை முன்னிட்டு ஜியோ தள்ளுபடி உடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவை அதிகமாகியிருக்கும் வேளையில் இண்டர்நெட் என்பது அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிமாக மாறியுள்ள வேளையில், அதிகவேக இண்டர்நெட் சேவைக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஏர்ஃபைபர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ஏர்டெல் இத்தகைய திட்டத்தை ஜியோவுக்கு போட்டியாக முன்கூட்டியே டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகம் செய்துள்ள நிலையில்...
ஜியோ தனது ஏர்ஃபைபர் திட்டத்தை தற்போதைய விலை அறிவிப்புகளை தாண்டி 20 சதவீத ஆஃபர் உடன் சாமானிய மக்களுக்கு அளிக்க திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் ஜியோ ஏர்ஃபைபர் நிறுவனங்கள், சிறிய அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விழாக்காலத்தில் தள்ளுபடி விலையில் சாமானிய மக்களுக்கும் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ தனது 5ஜி சேவை பிரிவில் ஏற்கனவே டேட்டா பேக் அறிமுகம் செய்து அசத்தியுள்ள நிலையில், அடுத்தாக ஏர்ஃபைபர் மூலம் அடுத்தபடியை எட்ட உள்ளது. இந்தியாவில் ஹோம் பிராட்பேண்ட் சேவையும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வேளையில், அதிகப்படிடான கருவிகளை பயன்படுத்தும் வீடு அல்லது அதிகப்படியான மக்கள் இருக்கும் வீட்டில் இந்த ஜியோஃபைபர் சரியான தேர்வாக இருக்கும். ஏர்ஃபைபர் மற்ற பிராட்பேண்ட் சேவை போல் அல்லாமல் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் காரணத்தால் அதிவேக இண்டர்நெட் சேவையை இதில் இருந்து பெற முடியும்.
இதற்கான அறிவிப்பும், தள்ளுபடியும் இந்த மாத இறுதியில் நடக்க உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications