ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கொட்டு வைத்த TRAI : டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்கள் இனி கட்டாயம்!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு மாறிவிட்டாலும் இன்னமும் பட்டன் போன்களை பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் டேட்டா பயன்படுத்தாத பயனர்களுக்கு என பிரத்தியேக ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்திவிட்டன.

வாய்ஸ் கால் மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் படிப்படியாக குறைத்துவிட்டன. இதனால் ஒரு நபர் பட்டன் போனே வைத்திருந்தால் கூட இண்டர்நெட்டே பயன்படுத்தவில்லை என்றால் கூட டேட்டா கொண்ட பேக் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI பயனர்களுக்கு மிக முக்கியமான மற்றும் நிவாரணம் அளிக்கக்கூடிய புதிய விதியை வெளியிட்டுள்ளது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கொட்டு வைத்த TRAI : டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்கள் இனி கட்டாயம்!!

இதன்படி இன்டர்நெட் (Mobile Data) வசதி தேவையில்லாமல், வெறும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்தும் நபர்களுக்காக குறைந்த விலையில் புதிய ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை ( Special Tariff Vouchers) அறிமுகப்படுத்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் TRAI உத்தரவிட்டுள்ளது.

குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் வழங்கும் சிறப்பு வவுச்சர்கள், டேட்டாவுடன் வழங்கப்படும் அதே செல்லுபடியாகும் கால அளவிற்கு இணையாக, 30 நாட்களுக்குட்பட்ட குறுகிய கால அளவிலும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Also Read

ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் அல்லது அந்த மாதம் இல்லாத பட்சத்தில் மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்து கொள்ளும் வகையில் குறைந்தபட்சம் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை டெலிகாம் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

அதே போல நீண்ட கால டேட்டா பேக்குகளுக்கு இணையாக, நீண்ட கால செல்லுபடியாகும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-மட்டும் திட்டங்களையும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒன்றாவது வழங்க வேண்டும். இன்டர்நெட் டேட்டா இல்லாத காரணத்தினால், டேட்டா பேக்குகளின் விலையை விட இந்த வாய்ஸ்/எஸ்எம்எஸ் பேக்குகளின் விலை விகிதாச்சார அடிப்படையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருக்க வேண்டும். அதாவது, டேட்டா இல்லாவிட்டாலும் வாடிக்கையாளர்கள் டேட்டா பேக் விலையையே செலுத்த வேண்டிய நிலை இருக்கக்கூடாது என கூறியுள்ளது.

Recommended For You

இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் தெரியும்படியும், கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என TRAI உத்தரவிட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் , மொபைல் செயலிகள் , வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த திட்டங்கள் வெளிப்படையாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.

டேட்டா இல்லாமல் வாய்ஸ் மட்டுமே கொண்ட பேக்குகள் இல்லை என்ற மக்களின் புகார்களை தொடர்ந்தும், பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட 1,132 கருத்துகளையும் ஆராய்ந்து, TRAI இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுவாக கிராமங்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள், வயதானவர்கள் அதிகமாக பட்டன் போன்களை தான் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இந்த உத்தரவு மிக பயனுள்ளதாக இருக்கும். ரீசார்ஜூக்காக செலவு செய்யும் பணம் விரைவில் குறைய போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+