ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் TRAI..!! வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்!!

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை துறையில் தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தான் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தான் நாடு முழுவதும் வேகமாக தன்னுடைய கிளைகளை பரப்பிய வண்ணம் இருக்கிறது. இருந்தாலும் முழுமையாக 5ஜி விரிவாக்கம் செய்யாததால் குறைந்த ரீசார்ஜ் கட்டணம் இருந்தாலு,மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற தயங்குகின்றனர். இது தான் தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாகிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் TRAI..!! வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்!!

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்டவை தற்போது அதிக அளவில் டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை தான் வழங்குகின்றன. 5ஜி உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்துவிட்டதால் இந்த நிறுவனங்கள் மக்களுக்கு டேட்டா அடிப்படையிலான திட்டங்களில் தான் சலுகைகளை வாரி வழங்குகின்றன. அந்த வகையில் படிப்படியாக வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தி வைத்துவிட்டன.

எனவே பட்டன் போன் பயன்படுத்துபவராக இருந்தால் கூட இன்டர்நெட் உபயோகப்படுத்த தெரியாத நபராக இருந்தால் கூட கட்டாயம் டேட்டா உடன் இருக்கக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை தான் அவர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு தான் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஒரு புதிய பரிந்துரையை அனுப்பி இருக்கிறது.

Also Read

இதன்படி அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச கட்டணத்திலான ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறதாம். தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய டேட்டா அடிப்படையிலான திட்டங்களோடு வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே வழங்கக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறது.

இது தொடர்பாக டெலிகாம் நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ் ஒரு புதிய வரைவினை கொண்டு வந்திருக்கிறது. இதன் மீது ஏப்ரல் 28ஆம் தேதி வரை மக்கள் கருத்து கூறலாம். அதன் பின்னர் இது சட்டமாக கொண்டு வரப்படும். இதன்படி அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர் நிறுவனங்களும் அதாவது ஜியோ, ஏர்டெல் போன்ற அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே வழங்கக்கூடிய ஒரு திட்டத்தையாவது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

Recommended For You

தற்போது ஜியோ, ஏர்டெல் ஆகியவை வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்டு திட்டங்களை வழங்குகின்றன ஆனால் அவை நீண்ட வேலிட்டியுடன் அதிக கட்டணம் கொண்டதாக உள்ளது. டேட்டா பலன்கள் இல்லை என்றாலும் கட்டணத்தை குறைக்கவில்லை. அனைத்து வாடிக்கையாளர்களும் டேட்டா திட்டத்தை மட்டுமே திணிப்பதை தடுக்கும் வகையில் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு சட்டமாக வரக்கூடிய பட்சத்தில் தற்போதுள்ள ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களோடு டேட்டா அல்லாத குறைந்தபட்ச கட்டணத்திலான ரீசார்ஜ் திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கியாக வேண்டும்.

எனவே இது நடைமுறைக்கு வந்தால் வீட்டில் பட்டன் போன் மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு நாம் குறைந்த கட்டணத்திலேயே ரீசார்ஜ் செய்ய முடியும். அதே போல வீட்டில் வைஃபை இருந்தாலும் அதிக பட்ச கட்டணத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இருக்காது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+