இரண்டு மடங்கு கல்லா கட்டும் சந்தோஷத்தில் ஏர்டெல், வொடபோன் ஐடியா, ஜியோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இத்தனை நாட்களாக பசி பட்டினியில் தவித்துக் கொண்டிருந்த ஏழ்மையான நாடு, பொருளாதார ரீதியாக தங்களை முன்னேற்றிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்த அளவுக்கு இந்திய டெலிகாம் துறையில் நஷ்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஏர்டெல், வொடாபோன் ஐடியா நிறுவனங்கள் மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பேக்குகளின் விலை ஏற்றம்.

அதெல்லாம் தெரியும். ஆனாலும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஓவர் குஷியாக இருக்க இன்னொரு காரணம் இருக்கிறது...! அது என்ன.. வாங்க பார்ப்போம்.

மலிவு விலை
 

மலிவு விலை

சுமாராக கடந்த 3 - 5 ஆண்டுகளாக ஏர்டெல் தொடங்கி ஜியோ வரை, தங்கள் வியாபாரத்தை பரப்பிக் கொள்ள, மிகக் குறைந்த விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களைக் கொடுத்து வந்தார்கள். ஜியோ வந்த பின் போட்டி இன்னும் அசுரத் தனமாக அதிகரித்துவிட்டது. வாய்ஸ் கால் மற்றும் டேட்டா திட்டங்களை இன்னும் மலிவு விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள்.

போட்டி

போட்டி

இதற்கு மத்தியில், ஜியோ அளவுக்கு தங்களை தொழிநுட்ப ரீதியாகவும் மேம்படுத்திக் கொள்ள ஏர்டெல், வொடாபோன் ஐடியா பயங்கரமாக முதலீடு செய்ய வேண்டி இருந்தது. இதனால் டெலிகாம் நிறுவனங்களின் கடன் பயங்கரமாக அதிகரித்தது. கடந்த பல ஆண்டுகளாக போதிய வருமானம் இல்லாமல் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமார் ரூ. 4 லட்சம் கோடியைத் தொட்டுவிட்டது.

வருவாய்

வருவாய்

மலிவு விலையில் சேவைகளை வழங்கியதால், இந்தியாவில் செயல்பட்டு வந்த பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. வருவாய் குறைந்தால் லாபமும் பயங்கரமாக குறையத் தானே செய்யும். அது தான் நடந்தது. ஒட்டு மொத்த இந்திய டெலிகாம் துறையும் நஷ்டத்தில் தவழத் தொடங்கியது. ஆனால் ஜியோ மட்டும் லாபம் பார்த்தது. ஏற்கனவே நஷ்டத்தில் தவழ்ந்து கொண்டிருந்த நிறுவனங்கள் தலையில் இடியை இறக்கியது உச்ச நீதிமன்ற லைசென்ஸ் பாக்கி தொடர்பான தீர்ப்பு. அதென்ன லைசென்ஸ் தொகை தீர்ப்பு

லைசென்ஸ் தொகை பாக்கி கணக்கு
 

லைசென்ஸ் தொகை பாக்கி கணக்கு

டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.

அரசு தரப்போ

அரசு தரப்போ

மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கிடுகிறார்கள். இந்த தீர்ப்பில் கணக்கிட்ட சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1.47 லட்சம் கோடி

1.47 லட்சம் கோடி

எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பினால் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சுமாராக 1.47 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கிறது. ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு + மிகக் குறைவான வருவாய் சேர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான நஷ்டத்தைக் கொடுத்தது.

நஷ்டக் கணக்கு

நஷ்டக் கணக்கு

ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் சுமார் 23,000 கோடி ரூபாயை நஷ்டமாக கணக்குக் காட்டியது . அதே போல செப்டம்பர் 2019 காலாண்டில் வொடாபோன் ஐடியா நிறுவனமும் சுமார் 50,000 கோடி ரூபாயை நஷ்டமாகக் காட்டியது. இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய காலாண்டு நஷ்டம் கண்ட நிறுவனம் என்கிற சாதனையையும் வொடாபோன் ஐடியா பெற்றது.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

இந்த கொடூர நஷ்டத்தைத் தாங்க முடியாத டெலிகாம் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா திட்டங்கள் விலையை அதிகரித்தது. எல்லா ரீசார்ஜ் பேக்குகளும் சுமாராக 30 - 40 சதவிகிதம் விலை அதிகமாயின. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்திய டெலிகாம் துறை நிறுவனங்களின் மொத்த செயல்பாட்டு லாபம் 29,450 ரூபாயாக இருந்தது. இந்த செயல்பாட்டு லாபம் வரும் 2020 - 21 நிதி ஆண்டின் 60,570 ரூபாயாக அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள் க்ரிசில் அனலிஸ்டுகள்.

ARPU

ARPU

அதோடு, ARPU - Average Revenue Per User என்று சொல்லப்படும் ஒரு பயனாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள் க்ரிசில் அனலிஸ்டுகள். இந்திய டெலிகாம் துறையின் ARPU கடந்த நிதி ஆண்டில் 116 ரூபாயாக இருந்ததாம். அது வரும் நிதி ஆண்டில் 145 ரூபாயாக அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதனால் தான், இத்தனை நாள் நஷ்டம் கண்டு வந்த இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வொடாபோன் ஐடியா உடன் லாபம் பார்த்து வந்த ஜியோ நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடத் தொடங்கி இருக்கிறார்கள். இனி தங்கள் நிதி நிலைமையை மெல்ல மேம்படுத்திக் கொண்டு முரட்டு லாபம் பார்க்கத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஒரு கம்பெனிக்கு லாபம் பார்ப்பதை விட நல்ல விஷயம் என்ன..? போடு... ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவா வா... போதும் போதுமென.... போதை தீரும் வரை வா.... தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி சேரலாம்... தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio Airtel Vodafone idea operating profit ARPU will surge

Crisil analysts said that the Airtel, Vodafone idea, Jio companies operating profit will increase 100 percent in next year and the ARPU for these companies will also see a decent surge.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X