இந்தியாவில் தொலை தொடர்பு சேவை வழங்குவதில் தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் முதலிடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருக்கிறது, இரண்டாவது இடத்தில் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. வோடபோன் ஐடியாவும் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனமாக இருக்கிறது.
இந்த நிலையில் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு என்பது அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன . இதற்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்து இருப்பதால் தங்களுடைய வருமானத்தை ஈடுகட்ட ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்து இருக்கின்றன.

சராசரியாக 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும் , மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் விலை உயர்வு இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை திடீரென உயர்த்தின. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சென்றனர்.
இந்த சூழலில் தான் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா வசதி வழங்கக்கூடிய 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் 900 ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம்.
தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் Average revenue per user அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாய் , டெலிகாம் நிறுவனங்கள் சேவை தரத்தை பராமரிக்கவும் இணைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேகமான இன்டர்நெட் வசதியை வழங்கவும் உதவுகின்றன . இந்த Average revenue per userஐ உயர்த்துவதே இந்த ரீசார்ஜ் கட்டண உயர்வின் நோக்கமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
உதாரணமாக தற்போது 719 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு ரீசார்ஜ் கட்டணம் இனி 799 ரூபாயாக அதிகரிக்கக்கூடும். அடிப்படை ரீசார்ஜ் திட்டங்கள் கூட குறிப்பிட்ட அளவு விலை உயர்வை காணும் என சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையாமல் இருக்க இந்த நிறுவனங்கள் கூடுதலாக சில என்டர்டெயின்மென்ட் சலுகைகளை வழங்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த ரீசார்ஜ் கட்டணம் உயர்வு என்பது கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்கள் குறிப்பாக மலிவு விலை ரீசார்ஜ் பிளான்களை பயன்படுத்தக் கூடிய மிடில் கிளாஸ் மக்களை பாதிக்கும். ஒரு குடும்பத்தில் 4 பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் ரீசார்ஜ் கட்டணம் சராசரியாக 50 ரூபாய் உயர்ந்தால் கூட மாத பட்ஜெட்டில் கூடுதலாக 200 ரூபாயை ரீசார்ஜ் செய்வதற்காக ஒதுக்க வேண்டும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications