செமி கண்டக்டர் கம்பெனியான மீடியா டெக்-கும் ஜியோ பிளாட்பார்மின் துணை நிறுவனமான ஜியோ திங்க்ஸ் லிமிடெட்டும் சேர்ந்து 2 சக்கர வாகனங்களுக்கான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாடுயூலை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த சாதனத்தின் மூலமாக எலக்ட்ரிக் வாகனத் துறையில் புரட்சிகரமான வர்த்தகத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் ரியல் டைம் டேட்டா அனலடிக்ஸ், கஸ்டமைஸ் செய்யக் கூடிய இன்டர்பேஸ், வாய்ஸ் ரெக்கக்னிஷன் கண்ட்ரோல் அம்சங்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதில் வாகன ஓட்டிகளுக்கு வரையறை இல்லாத கண்ட்ரோல் இருக்கும். ஐஓடி சார்ஜிங் வசதி, ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

ஜியோ ஆட்டோமேடிவ் ஆப் சூட்டில் ஜியோ வாய்ஸ் அசிஸ்டென்ட், ஜியோ சாவ்ன், ஜியோ பேஜஸ், ஜியோ எக்ஸ்ப்ளோர் உள்ளது. இதனால் 2 சக்கர வாகன ஓட்டிகளுக்கு அருமையான அனுபவம் கிடைக்கும். மீடியா டெக்கினால் இயக்கப்படும் 2 வீலர் ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்ட்டர் தயாரிப்பில் ஜியோ திங்க்ஸ் உடன் இணைந்துள்ளோம். இதன் மூலம் ஆட்டோமோடிவ் துறையை புதுமையான முறையில் வலுப்படுத்த முடியும். இந்த கிளஸ்டர் 2 வீலர் ஸ்மார்ட் டேஷ்போர்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று மீடியா டெக்கின் இன்டலிஜென்ட் டிவைசஸ் பிசினஸ் குரூப்பின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஜெர்ரி யூ தெரிவித்தார்.
ஜியோ திங்க்ஸுடன் இணைந்து மீடியா டெக் வடிவமைத்து இந்தியாவில் தயாரித்துள்ள 2 வீலர் ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் இந்தியாவில் புதுமையை உருவாக்கும் நோக்கத்தை வலுப்படுத்துகிறது. இது மீடியா டெக்கின் அட்வான்ஸ்டு சிப்செட் டெக்னாலஜி மற்றும் ஜியோ திங்க்ஸின் டிஜிட்டல் சொல்யூஷன்களை அடுத்த தலைமுறை 2 வீலர் மார்க்கெட்டுக்கு அளிக்கும்.
மீடியா டெக்கும் ஜியோ திங்க்ஸும் சேர்ந்து உலக அளவில் மொபிலிட்டி இன்னோவேஷனுக்கு வாகன ஓட்டிகளுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று மீடியா டெக்கின் பொதுமேலாளர் சிகே வாங் கூறினார். மீடியாடெக் மற்றும் ஜியோ திங்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள 2 வீலர் ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் டிவைஸ் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த வசதியையும் வாகனத்துக்கான பாதுகாப்பையும் தருகிறது.
இரு சக்கர வாகனத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் க்ளஸ்டர் ரெஃபரன்ஸ் பிளாட்ஃபார்ம் உயர் செயல்திறன் கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட இரு சக்கர வாகனம் ஓட்டும் அனுபவத்துக்கான சிறந்த இணைப்பு அனுபவத்தை வழங்குகிறது.
இது மேம்பட்ட இணைப்பு, பாதுகாப்பு மற்றும் கஸ்டமைஸ்டு சேவைகளுக்காக ஃபோன், இரு சக்கர வாகனத்தின் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ரைடர் ஹெட்ஃபோன்களுக்கு இடையே மூன்று வழி புளூடூத் இணைப்பை செயல்படுத்துகிறது.
Story written by: Jayachandran
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications