முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தொலைதொடர்பு சேவை பிரிவில் கால் பதித்து தன்னுடைய 9ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய ஒன்பதாவது பிறந்த நாளின் ஒரு பகுதியாக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் இந்தியாவில் தற்போது 500 மில்லியன் பயனர்களை கொண்ட மிகப்பெரிய தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்திருக்கிறது. 349 ரூபாய்க்கு செலிப்ரேஷன் பிளான் என்ற பெயரில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கிறது . இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்ஸும் கிடைக்கும்.
இந்த டேட்டா பிளானின் வேலிடிட்டி காலம் செப்டம்பர் 5 தொடங்கி அக்டோபர் 5 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது . செப்டம்பர் 5ஆம் தேதி 349 ரூபாய்க்கு இந்த செலிப்ரேஷன் பிளான் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம். அதே போல ஒரு மாதம் ஜியோ சாவனுக்கான சந்தா இலவசம். சோமேட்டோ கோல்டு திட்டம் மூன்று மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஜியோ ஹோம் சேவைக்கான இரண்டு மாத இலவச டிரையல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோ தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி இந்த பிரத்தியேக ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இது தவிர செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் இலவச அன்லிமிடெட் 5 ஜி டேட்டா கிடைக்கும். அவர்கள் எந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்திருந்தாலும் இந்த மூன்று நாட்களுக்கு இலவசமாக 5g அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.
ஜியோ ஹோம் பயனாளர்களுக்கு 1200 ரூபாய் மதிப்பிலான ஒரு செலிப்ரேஷன் பிளான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு மாதத்திற்கான அமேசான் ப்ரைம் லைட் சந்தா இலவசமாக கிடைக்கிறது .அதேபோல ஜியோ ஹாட்ஸ்டார் ,ஜியோ சாவன் ஆகியவற்றுக்கான சந்தாவும் இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications