ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மூன்றாம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை 25% வரை உயர்த்தியது. இதனால் பல்வேறு வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் பிஎஸ்என்எல் உள்ளிட்ட மாற்று நிறுவனங்களுக்கு சேவையை மாற்ற தொடங்கினர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிதாக மூன்று அன்லிமிடெட் அப்கிரேட் (True Unlimited Upgrade' add-on plans)என்ற add-on திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டணங்களை உயர்த்திய பிறகு புகழ்பெற்ற பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை ரத்து செய்தது. இது பல்வேறு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவை அளிக்கும் விதமாக புதிய add-on பிளான்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அன்லிமிடெட் அப்கிரேட் பிளான் என்ற பெயரில் 51 ரூபாய் , 101 ரூபாய் மற்றும் 151 ரூபாய் என மூன்று விலைகளில் இந்த add-on திட்டங்கள் கிடைக்கின்றன.
இவை அனைத்தும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் கூடுதலாக 4ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. புதிதாக அறிமுகமாகியுள்ள 51 ரூபாய் அன்லிமிடெட் அப் கிரேட் பிளானில் 3ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கிறது. 101 ரூபாய் திட்டத்தில் நான் 6 ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கிறது.
151 திட்டத்தில் 9 ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி சேவை பயன்படுத்த வேண்டும் எனில் அவர்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் உடன் இணைந்திருக்க வேண்டும் மேலும் அவர்களது செல்போன் 5ஜி சேவையை பயன்படுத்தக்கூடிய வசதி கொண்டிருக்க இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 1.5 ஜிபிக்கும் குறைவான டேட்டா கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமாக இந்த பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு நாளைக்கு 2 ஜிபி மற்றும் அதற்கு மேல் டேட்டா வரம்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications