ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட், உலகப் புகழ்பெற்ற பிளாக்ராக் நிறுவனத்தின் முதலீட்டு அனலிசிஸ் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் தளமான அலாடினை (Aladdin) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் நிதி சேவை பிரிவான ஜியோ நிதிச் சேவைகள் (JFSL) மற்றும் அமெரிக்காவின் பிளாக்ராக் நிறுவனத்தின் 50:50 கூட்டு முயற்சியான ஜியோ பிளாக்ராக் அசெட் மேனேஜ்மென்ட் இந்த முயற்சியை செய்ய உள்ளது. இந்திய முதலீட்டாளர்களுக்கு எளிமையான, மலிவான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கம்.

ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்:
ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட், ஜியோ பைனான்சியல் சரிவீசஸ் மற்றும் பிளாக்ராக் நிறுவனங்களின் 50:50 கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி, 2023 ஜூலை 26-ல் அறிவிக்கப்பட்டு, 2024 அக்டோபர் 29-ல் ஜியோ பிளாக்ராக் அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் ஜியோ பிளாக்ராக் டிரஸ்டி ஆகிய இரு நிறுவனங்களை உருவாக்கியது. 2025 மே 26-ல், SEBI இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நடத்துவதற்கான அனுமதியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம், மூன்று கடன் நிதிகளை (debt funds) தொடங்குவதற்கு SEBI-யிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்திய முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் முதல் (digital-first) அணுகுமுறையுடன் மலிவு விலையில் முதலீட்டு தயாரிப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது ஜியோ பிளாக்ராக்.
அலாடின் என்றால் என்ன?:
அலாடின் (Asset, Liability, and Debt and Derivative Investment Network) என்பது பிளாக்ராக் நிறுவனத்தின் முதலீட்டு அனலிசிஸ் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் தளமாகும். இது உலகளவில் 200-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் 21 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது. இந்த தளம் பங்குகள், நிலையான வருமானம், டிரெவேட்டிவ்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் பிற மாற்று முதலீடுகள் உள்ளிட்ட பல சொத்து வகைகளை ஆய்வு செய்து முதலீடு செய்கிறது.
அலாடின், ஜியோ பிளாக்ராக் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதலீட்டின் "நரம்பு மண்டலமாக" செயல்படுகிறது. இது மேம்பட்ட டேட்டா அனலிசிஸ், மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சந்தை தரவுகளை ஒருங்கிணைத்து, ரியல் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது. இதன் முக்கிய அம்சங்கள்:
ரிஸ்க் மேனேஜ்மென்ட்: சந்தை மாற்றங்கள், வட்டி விகித மாறுபாடுகள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகளின் தாக்கத்தை மதிப்பிடுகிறது.
போர்ட்ஃபோலியோ மேலாண்மை: முதலீட்டு சொத்துகளை ஒதுக்கீடு செய்யவும், மேம்படுத்தவும் உதவுகிறது.
வர்த்தகம் மற்றும் இணக்கம்: முதலீடுகளை வாங்கவும் விற்கவும், சட்ட இணக்கத்தை உறுதி செய்யவும் உதவுகிறது.
ரியல்டைம் கண்காணிப்பு: முதலீடுகளின் செயல்திறனை தொடர்ந்து கண்காணிக்கிறது.
அலாடின் எவ்வாறு இயங்குகிறது?:
இது பெரிய அளவிலான சந்தை தரவுகளை ஒருங்கிணைத்து, துல்லியமான அனலிசிஸ் மற்றும் முதலீட்டு டிப்ஸ்களை முதலீட்டு மேலாளர்கள், ரிஸ்க் அனலிஸ்ட்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு கொடுத்து உதவுகிறது. உதாரணமாக, ஒரு முதலீட்டு மேலாளருக்கு சில பங்குகள் அரசாங்கக் கொள்கை மாற்றங்களால் பாதிக்கப்படலாம் என்று அலாடின் எச்சரிக்கை செய்யலாம், இந்த முதலீட்டில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ஏற்படும் செலவுகளை குறைக்க மாற்று முதலீடுகளை பரிந்துரைக்கலாம்.
இந்த தளம், மனித பிழைகளை குறைப்பதற்கும், வேகமான முடிவுகளை எடுப்பதற்கும், சிக்கலான நிதி சந்தைகளை எளிதாக நிர்வகிக்கவும் உதவுகிறது.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தை:
இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் சந்தை, மே 2025-ல் ₹72.2 டிரில்லியன் மதிப்பை எட்டியுள்ளது, மேலும் இது வேகமாக வளர்ந்து வருகிறது. ஜியோ பிளாக்ராக், இந்த சந்தையில் ஒரு "ரிலையன்ஸ் ஜியோ-போன்ற புரட்சியை" ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் பரந்த டிஜிட்டல் நெட்வொர்க் மற்றும் பிளாக்ராக்கின் உலகளாவிய நிபுணத்துவம் இணைந்து, இந்திய முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.
எப்போது அறிமுகமாகும்?:
அலாடின் தளம், ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு தயாரிப்புகளுடன் இணைக்கப்பட்டு, அடுத்த சில மாதங்களில் இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். ஜியோவின் JioFinance செயலி மூலம் இந்த தளத்தை அணுகலாம், மேலும் இது முதலீட்டு அனுபவத்தை எளிதாக்கும்.
மேலும், ஜியோ பிளாக்ராக் அதன் இணையதளத்தில் "முன்கூட்டிய அணுகல்" (early access) முயற்சியை தொடங்கியுள்ளது, இதன் மூலம் முதலீட்டாளர்கள் முதலீட்டு அடிப்படைகளைப் பற்றி அறிந்து, வரவிருக்கும் தயாரிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications