முகேஷ் அம்பானி-க்கு கிடைத்த Aladdin அற்புத விளக்கு.. BlackRock உடன் ஜியோ கூட்டணி..!

ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சந்தை மதிப்பை உயர்த்தவும், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் முதலீட்டு லாபம் கொடுக்க வேண்டும் என்ற ஒன்றை இலக்குடன் தனது நிதியியல் சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்து ஒரு பங்கு விலை 261 ரூபாய் என்ற மதிப்பில் பட்டியலிட காத்திருக்கிறார்.

இந்த நிலையில் உலகிலேயே மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளை வைத்துக்கொண்டு சத்திமில்லாமல் ஆதிக்கம் செய்யும் பிளாக்ராக் இன்க் உடன் ஜியோ பைனான்சியல் சரவீசஸ் 50:50 பங்கீட்டில் ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவில் அசர்ட் மேனேஜ்மென்ட் வர்த்தகத்தை செய்வதாக அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி-க்கு கிடைத்த Aladdin அற்புத விளக்கு.. BlackRock உடன் ஜியோ கூட்டணி..!

அமெரிக்காவின் பிளாக்ராக் நிறுவனத்தின் கீழ் மட்டும் சுமார் 9.42 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வாகம் செய்கிறது, இது கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தை விடவும் 3 மடங்கு அதிக மதிப்புடைய சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது. இப்படிப்பட்ட நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 50:50 பங்கீட்டில் கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

பிளாக்ராக் மற்றும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இணைந்து சுமார் 300 மில்லியன் டாலர் அதாவது 2400 கோடி ரூபாய் முதலீடு செய்து இக்கூட்டணி நிறுவனத்தை இந்தியாவில் Asset Management வர்த்தகத்திற்காக துவங்க உள்ளது.

பிளாக்ராக் இந்தியாவில் DSP உடன் கூட்டணியில் DSP BlackRock Investment Managers என்ற பெயரில் மியூச்சவல் பண்ட் வர்த்தகத்தில் இருந்தது, இதை தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க முடியாத காரணத்தால் 2018ல் வெளியேறியது. தற்போது Jio BlackRock கூட்டணியில் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைகிறது.

முகேஷ் அம்பானி-க்கு கிடைத்த Aladdin அற்புத விளக்கு.. BlackRock உடன் ஜியோ கூட்டணி..!

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூலம் முகேஷ் அம்பானி தன்னிடம் இருக்கும் டேட்டா மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய நிதியியல் சேவை துறையில் பெரிய வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்பது தான் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த BlackRock நிறுவனத்திடம் Aladdin என்ற ஒரு அற்புத விளக்கு உள்ளது, அதாவது ஒரு டிஜிட்டல் சொத்து மேலாண்மை தளம்.

BlackRock நிறுவனம் இந்த தளத்தை முதலில் தனது சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கியது, பின்னர் தனது வாடிக்கையாளர்களுக்கு software as a service ஆக விற்பனை செய்தது. இத்தளம் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தையும், முதலீட்டையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஆரம்பிக்கும் போதே 36 லட்ச வாடிக்கையாளர்கள் உடன் துவங்கும் காரணத்தால், BlackRock நிறுவனத்தின் Aladdin முதுகெலும்பாக இருக்கும். மேலும் Jio BlackRock கூட்டணி நிறுவனம் 44வது நிறுவனமாக 44.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய மியூச்சவல் பண்ட் துறையில் இறங்க உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+