ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், விரிவடைந்து வரும் தனது 5ஜி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்துவதற்காக, தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்கும் மிமோசா நெட்வொர்க்கை சுமார் 60 மில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் வியாழக்கிழமை தெரிவித்தன.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரேடிசிஸ் கார்ப் மற்றும் மிமோசா நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்ஸ்பான் நெட்வொர்க்ஸ் ஹோல்டிங்ஸ் இடையே இந்த 60 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் 5ஜி சேவையை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இத்துறையில் சிறந்து விளங்கும் மிமோசா நெட்வொர்க் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது தனது சேவையை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வலிமைப்படுத்துகிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், விரிவடைந்து வரும் தனது 5ஜி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை பிற நிறுவனங்களை காட்டிலும் மேம்பட்ட சேவை அளிக்கவும், தனது நெட்வொர்க்-ஐ வலுப்படுத்தவும் கம்யூனிகேஷன்ஸ் கருவிகளை தயாரிக்கும் மிமோசா நெட்வொர்க்கை சுமார் 60 மில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது.
மிமோசா நெட்வொர்க்
Mimosa WiFi 5 மற்றும் புதிய WiFi 6E தொழில்நுட்பங்களி இயங்கும் பாயிண்ட்-டு-பாயிண்ட் மற்றும் பாயின்ட்-டு-மல்டி-பாயிண்ட் ப்ராடெக்ட் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. இதனுடன் இப்பிரிவை தொடர்புடைய ஆக்சசரிஸ்-களையும் கொன்டு உள்ளது மிமோசா நெட்வொர்க்.
டெலிகாம் சேவை
இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கும் ஜியோ கடந்த ஆண்டு முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான அலைக்கற்றைகளை கைப்பற்றிய பிறகு, நாடு முழுவதும் 5G மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை அறிமுகம் செய்தும் விரிவாக்கம் செய்தும் வருகிறது.
சீனாவின் ஹூவாய்
இந்தியா உட்பட பல நாடுகள் கம்யூனிகேஷன்ஸ் கருவிகளை தயாரிக்கும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை தடை செய்துள்ள வேளையில் ரிலையன்ஸ் இத்துறை நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரேடிசிஸ் கார்ப் மற்றும் மிமோசா நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்ஸ்பான் நெட்வொர்க்ஸ் ஹோல்டிங்ஸ்-யிடம் இருந்து வாங்கும் நிலையில் Airspan நிறுவனத்தின் நிர்வாக குழுவில் ரிலையன்ஸ் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications